பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத் தமிழ் * 35

சூடிக்கொடுத்த சுடர்கொடி

அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையில் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு,

- உய்யக்கொண்டனர்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை பாடி யருளவல்ல பல்வளையாய் நாடிநீ வேங்கடவற் கென்னை விதி யென்ற இம் மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு.

பாதங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதம் அனைத்துக்கும் வித்தாகும் ,கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு.

அல்லிநாள் தாமரைமேல் ஆரணங்கின் இன் துணைவி மல்லி நாடாண்ட மடமயில் மெல்லியலாள் ஆயர்குல வேந்தன் ஆகத்தாள் தென்புதுவை வேயர் பயந்த விளக்கு.

- திருக்கண்னமங்கையாண்டான் கோலச் சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும் சிலத்தினள் தென்திருமல்லி நாடிச் செங்குழல் மேல் மாலைத்தொடை தென்னரங்கருக் கீயும் மதிப்புடைய சோலைக்கிளி அவள் தூய நற்பாதந் துணைநமக்கே.