உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54大 ஆண்ட்ாள் பிள்ளைத்தமிழ்

மேகம்போல் கருமை முதிர்ந்த மெல்லிய சுரிந்த குழலும், பிறைபோன்ற நெற்றியும், வில்போன்று வளைந்த ஒளிகொண்ட புருவமும், ஒளிபொருந்திய அம்புபோன்ற மையுண்ட கண்களும், தாமரை மலரும் வெண்மதியும் போன்ற முகமும், முத்துப்போன்ற பற்களும் உடையவள் அவள்.

மழலைச் சொல் மாறாத ஐந்து வயதிலேயே அறிவால் பிஞ்சாய்ப் பழுத்த பெண்.

அமுதமாகி நல்ல கனியாகிய அவளைப் பிள்ளைக் கவியாகிய பாடலால் பேருலகில் ஏத்தி, எப்போதும் பேரின்பம் அடைந்தேன்!

காப்புப்பருவம் திருவரங்கன்

சீர்கொண்ட வெண்திரைப் பால்ஆழி யுள்நின்று

சிதரன் பணிவிடையி னால்

திருமல்லி நாட்டினுள் பூந்துழாய்க் காட்டினுள்

சிவில்லி புத்துரர் எனப்

பேர்கொண்ட பேரின்ப வீட்டில்மறை யவர்.பிரான்

பெற்றதெள் ளமுதுஎன வரும்

பெண்அரசி யைக்காக்க: மூதண்டம் முண்டகப்

பிரமகற் பாந்தத்து முந்

நீர்கொண்ட வாறுஉணர்ந்ந்து ஆல்இளந் தளிரின்மேல்

நிலைபெறு பசுங்குழவி யாய்

நெடுநாள் அகத்துஇட்ட பல்உயிரை வினைவழி

நிறுத்தப் பெயர்த்தும்வன சத்

தார் கொண்ட திருஉந்தி மடுவில்அய னைத்தந்த

தாதை வால் வளைமுத்தம் நீர்த் தரங்கம்மொண்டு எறிதென் அரங்கத்து அரவணைச்

சக்ரா யுதக்கடவு ளே. (10)

சீர்மை கொண்ட வெள்ளிய அலைகளையுடையது திருபாற் கடல். அதனுள் அறிதுயில் கொள்பவன் திருமால். அவன் பணித்த கட்டளைப்படி, தோன்றியவர் ஆண்டாள். திருவில்லி நாட்டினுள் அமைந்த அழகிய துழாய் வனத்தில் உள்ளது சீர்வில்லிபுத்துார். அது வடபத்திரசாயி எம்பிரான் குடிகொண்ட திருத்தலம்: அடியவர்க்குப் பேரின்ப வீடு.