பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ல் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

மெய்ந்நின்று புரகித்து உரோமம் சிலிர்த்துஉபய

விழிகள்நீர் அருவிபொழி யும்

வெண்ணைபோல் உள்ளமும் குழையும் உயிர் ஆனந்த

வெள்ளத்துள்ளேஅழுந் தும்

அந்நன்றி கைம்மாறு எனப்பரவும் மதுரகவி

அடியிணைக ளேபரவு தும்:

அகிலமா தான்்னும் கோதையைப் புகழ்பாடல்

அகிலம்னங் கும்தழைய வே. [13]

உலகம் அனைத்துக்கும் அன்னை (பூமித்தாய்) எனப்படும் கோதை நாச்சியாரைப் புகழ்கின்ற பிள்ளைத்தமிழ் பாடல் உலகம் எங்கும் தழைக்கும் பொருட்டு: எந்நன்றியை ஏற்றாலும் அந்நன்றியை ஏற்றவர் செய்கின்ற கைம்மாறும் உலகத்தினில் உண்டு.

மலர்மங்கை நாயகனே பரம்பொருள் என்று வாதிட்டு, அறியாமையை ஒழித்து, நான், எனது என்ற அகங்கார மமகாரங்களாகிய இருவகைப் பாசங்கள் ஒழியும்படி செய்த நன்றியை அடைந்தமைக்குக் கைம்மாறு ஏதுமே இல்லை.

வெண்ணை திருடி உண்டவன் என்று கூறுவதை விட, என் சிந்தையிலே புகுந்துகொண்ட குருகூர் நம்பியாகிய சடகோபன் என்று கூறுகையில், என் அழகிய நாவிலே அமுதம் ஊற்றெடுக்கும்.

உடல் உரோமம் புளகரும்பி நின்று இருவிழிகளும் அருவிபோல் நீரைப் பொழியும். வெண்ணைபோல் என்மனமும் குழையும்.

உயிரானது மகிழ்ச்சி வெள்ளத்துள்ளே அழுந்தும் இந்த மெய்ப்பாடுகளே சடகோபர் செய்த செய்ந்நன்றிக்கு ஏற்ற கைம்மாறு என்று அவரையே போற்றுகின்ற மதுரகவியினுடைய அடியிணை களையே வணங்குவோம்.

நாதமுனிகள்

ஒருநான் மறைக்கற்ப கத்தின்ஒண் கனிஎன்னும்

உபநிடத மதுரநதி வாழ்வு -

உற்றிடும் திருவாய் மொழிப்பயோ ததியிடத்து

ஒர்ஆயிரம்பாடல்.ஆம்