பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த கோவேந்தன் * 79

"கான்.உலாம் முல்லையில் குல்லையைத் துழனியில்

கழனியில் கமலம், எனை நீ காட்டில்நாட் டினில்ஒப்பது அன்று பொற்புடைய பொற்

கன்னியைப் பெற்றளித் தேன்,

ஞானபூரணமாயன் அவயவங்கட்குஉவமை

நாட்டமணி வடம்ஆயி னேன், நான்உவமை என்னநீ மணிமாலை ஆகியும்ஒர்

நளினியைப் பெற்றிலா யால்.

ஆனதால்" எனஅவ மதித்ததாயினைவெறுத்து

அந்தரம் விறுஎய்த வே

ஆயர்பாடிச்செல்வர் வில்லிபுத் துர்அதனுள்

அகிலமன் னுயிர்தழைப் பான்

தேன்.அறாப் பரிமளத் துளபத்து உதித்தநீ

செங்கீரை ஆடியரு ளே!

செஞ்சொல் திருப்பாவை பாடித் தரும்பாவை

செங்கீரை ஆடியரு ளே! (32)

காடு சூழ்ந்த முல்லை நிலத்தில் கிளைத்திருந்த துழாயைப் பார்த்து, ஒசைமிக்க மருதநிலத்து வயலில் பூத்த தாமரை மலர் இழித்துக் கூறியது:

"ஒ துளசியே! நீ ன்ன்னைக் காட்டிலும் நாட்டிலும் ஒப்பாக மாட்டாய் ! எப்படியெனில் அழகிய திருமகளைப் பெற்றுத் திருமாலுக்கு அளித்தேன். அதுமட்டுமா? வாலறிவன் ஞானபூரணன்) ஆகிய அந்த மாயவன் கண், கை, கால், முகம் முதலிய பல உறுப்புகளுக்கும் உவமை ஆவதை நிலை நாட்டுவதற்காக மதாணி (கவுத்துவ) மணி மாலையும் ஆயினேன். -

"நீ எனக்கு உவமையாக முயன்று மணிமாலை ஆனாய்! அவ்வளவுதான்். என்னைப்போல் ஒரு திருமகளை நீ பெற இயலவில்லையே! ஆதலால் நீ எனக்கு எவ் வகையிலும் உவமை ஆகமாட்டாய்!” என்று அவமதித்துப் பேகியது. அதனைத் துளசியால் பொறுக்க இயலவில்லை.

அந்தத் (அவமதித்த) திருமகளின் தாயினை வெறுத்தது துளசி. தாமரை கூறிய வேறுபாடு நீங்கித் தான்் பெருஞ்சிறப்புப் பெறுவதற் காக ஆயர்பாடிச் செல்வராகிய ஆலிலைப் பள்ளியான் குடி கொண்ட வில்லிபுத்தூரிலே உலகத்தில் நிலைபெற்ற உயிர்கள் மணம் மிக்க துளசித்தாய் உன்னைப் பெற்றாள்.