பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த வேர்வை போக, நீர்த் துறையில் நீராடி ஏகுவர். மகளிர் நீர் ஆடி விட்டுச் செல்வதை ஒர் ஆண் அன்னம் கண்டது. அருகில் இருந்த பேடையிடம் 'இம் மகளிரின் மென்னடையும் உன்னடையும் வேறு அல்ல ஒத்துள்ளன” என்றது.

உடனே டேடை, 'நீ அம் மகளிர் நடைக்கு என் நடையை ஒப்பிடுவதால், உன் மனம் எனக்கு மட்டும் உரிமையாகாமல், அயலிடத்தும் தாவுகின்றதன்றோ! அதனால் நீ என்னைத் தொடாதே! என்று ஊடியது.

அன்னம் பேடை ஊடியது கண்டு, நெஞ்சு பொறுக்காமல் அதன் ஊடலைத் தீர்ப்பதற்காக அதன் மெல்லிய அடியில் விழுந்து வணங்கி ஊடலை நீக்கிப் பின் அதனுடன் கலவிச் சீராடியது. அத்தகைய திருமுக்குளம் என்னும் பொய்கையைக் கொண்ட புதுவை அழகியே! செங்கீரை ஆடியருள்:

செஞ்சொல் திருப்பாவை பாடித்தரும் பாவையே திருமொழி தந்தவளே செங்கீரை ஆடியருள்!

பாசம் தழைப்பஇரு வினைதழைத் தேசனன

பந்தம் தழைத்தசிறி யோர்

பழயபே ரின்பம் தழைத்தவீடு எய்தப்

பராங்குசன் எனத்தழைத் தே

வாசம் தழைத்துமக ரந்தம் தழைத்துநறை

வழிய முகை அவிழ்செவ்வி யில்

வாடவா டப்பரிம ளம் தழைத்து ஒளிதழையும்

மகிழ்மாலை புனைமார்பி னான்

நேசம் தழைத்ததிரு மகளாகி யேகற்பு நிலைதழைத்து அருள் தழைத்தே

நிறைதழைத்து உததடிய பொ.றைதழைத துய பரம

நேமம் தழைத்துமுந் நீர்த்

தேசம் தழைத்திடத் தழைதமிழ்ப் புதுவையாய்!

செங்கீரை ஆடியரு ளே!

செஞ்சொல் திருப்பாவை பாடித் தரும்பாவை!

செங்கீரை ஆடியரு ளே! (35)