பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 86

ஆக, நிலா அமுதமும், தேனும், மழைநீரும் தனித்தனியாக ஒடி மூன்று குளங்களாக உருவாகும்.

காதல் துணையோடு நடத்தும் இல்லறத்தினரும் துறவறத்தினரும் வாழ்கின்ற புதுவையின் பெண் அமுதே தாலோ தாலேலோ அரங்கத்து அமுதம் விரும்பிய பெண் அமுதே! தாலோ தாலேலோ!

வற்றாக் கரட மதக்கலுழி

வழியக் கடைக்கண் ணினில் வடவை

வழிந்து பொழிந்து புறம்காட்ட

மறம்காட் டுநர்மார் பினை உழுத

முற்றாப் பிறைக் கிம் புரிக்கோட்டு

முடக்கும் தடக்கை வயக்களிற்றை

முழவத் துணைத்தோள் புடைத்து உடக்கி

முழக்கி உழக்கி உயிர்பருகிப்

புற்றாடு அரவிற் பிணைந்து இடித்துப்

பொருமல் வரைக் கொன்று உலப்பில் இகள்

புரிமா துலன் பொன் முடி உதைத்த

பொன்தாள் கற்றுஆ நிரைமேய்த்த

சிற்றா யனைக் கா தலித்தருள் சிற்றா நிடைப்பெண் அமுதே தாலேலோ!

சிறைவண்டு இயிர்பூந் துளவு அளித்த

தேனே தாலோ தாலேலோ! (38)

வற்றாத மதப் பெருக்குச் சுவடு பட்டு வழிவது கடைக் கண்ணிலே வடவைத் தீ வழிந்து நிலத்தில் பொழிவது தம் வலிமை காட்டி எதிர்த்த வர் மு.துகு காட்டி ஒடும்படி அவர்கள் மார்பினைக் குத்துவது அது முதி ராத பருவமுடைய தந்தங்கள் பிறைபோன்று வளைந்து வெண்மையனது பூண் கட்டியது. அந்தத் தந்தங்களையும் முடக்கும் துதிக் கையையும் உடையது. அத்தகைய வயக்களிறு ஆகிய குவலயாபீடம் என்னும் யானையை முழவம் போன்ற இரு தோள்களால் தாக்கி வருத்தி முழக்க மிட்டுக் கலங்கச் செய்து அதன் உயிர் பருகினான் கண்ணன்.