பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

திருவிளையாடற் புராணம்


இவர்கள் இருவர் கண்ணுக்கு மட்டும் காலபாசத் தோடு எம தூதர் அங்கு வந்து காத்திருப்பது தெரிந்தது. அடே இந்த மணமகன் உயிரை எப்படிப் பிடிப்பது? அங்கலக்ஷணத்தோடு தங்க நிறமுடைய இவ் தெரிந்தது. எப்படி உயிர் கவ்வுவது? நோய் நொடி இல்லாதவனைப் பிடி என்றால் எப்படி முடியும்?' என்று கேட்டான்.

"ஆள் அழகனா இளைஞனா என்பதை நாம் ஆராய வேண்டியது இல்லை. கணவனையும் கதறவிட்டுப் பார்ப்பணியின் உயிரைக் கவர்ந்தோமே நாம் அப்பொழுது இரக்கப்பட்டோமா! கணக்கு முடிந்தது; பிணக்குக் கொள்ள முடியாது; நம் கடமையைச் செய்துதான் தீர வேண்டும்; வழிதானா இல்லை; என்றோ தொத்திக் கொண்டிருந்த பழைய அம்பினைக் காற்றில் அசைத்து அவள் வயிற்றில் பாய்ச்சவில்லையா! நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். மரணம் என்பது பேதம் பார்ப்பதில்லை. இளைஞனா முதியனா என்றோ நல்லவனா கெட்டவனா என்றோ ஆண்டியா அரசனா என்றோ பேதம் பார்ப்பதில்லை. உயிரைப் போக்க எவ்வளவோ வியாதிகளை உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறோம். வயித்தியர்களுக்கு அகப்படாத புதிய நோய்களைப் படைப்பது நாம் தானே; துரிதமாகச் செல்லும் ஊர்திகளை படைத்ததும் நாம் தானே; விதி என்று வந்து விட்டால் எந்தச் சதி செய்தாவது உயிரைப் போக்கி விட முடியும். அதோ கட்டி வைத்த பசுமாட்டைப் பார்; அதனை முட்டி வைக்கத் தூண்டினால் அதன் அருகில் ஒருவரும் நெருங்க முடியாது. நாம் உயிரைப் பிடித்துக் கொள்ளலாம். பழி நம் மீது வராது; அநியாயமாகச் செத்துவிட்டானே என்று கதறுவார்கள். "விதி