பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

25


கூகைமுல்லை' என்னும் திருப்பதிகத்தைப் பாடியருளிய போது பாலைநிலம் நெய்தல் நிலமாக மாறியது என்பது வரலாறு. இவ்வற்புத திகழ்ச்சியினை,

“ஞாலத்தினர் அறிய மன்னு நனிபள்ளியது
பாலைதனை நெய்தலாக்கியும்” (திருவுலாமாலை)

என நம்பியாண்டார் நம்பிகள் குறிப்பிட்டுப் போற்றியுள்ளமை இங்கு நினத்தற்குரியதாகும். பாம்பு ஒழியப் பாடுதலாவது, பாம்பினாற்ைகடிக்கப்பட்டார் பாம்பின்விடம் நீங்கி உயிர்பெற்றெழுமாறு திருப்பதிகம் பாடியருளல். அப்பூதியடிகள் மகன் மூத்த திருநாவுக்கரசு வாழையிலையரியச் சென்று பாம்பு கடித்து இறந்த நிலையில் ‘ஒன்று கொலாம்’ என்னும் முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி அவனை உயிர் பெற்றெழச் செய்ததும், தன் மாமன் மகளை மணந்துகொள்ளும் விருப்புடன் வந்த வணிகனொருவன் வழியிடையே இரவுப் பொழுதில் திரு மருகலில் பொதுமடத்தில் துயிலும்போது பாம்பு தீண்டி யிறந்தானாக, அவனுடன் வந்த காதலி மருகற்பெருமானை நோக்கி அழுதரற்றிய நிலையில், திருஞானசம்பந்தப் பிள்ளையார் ‘சடையாயெனுமால்’ என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி விடம் நீக்கி வணிகன் உயிர்பெற்றெழுமாறு செய்தருளியதும் பாம்பொழியப் பாடிய அற்புத நிகழ்ச்சிகளாகும். கராம்-முதலை. கராம் கொண்ட பாலன் என்றது. கொங்குநாட்டுப் புக்கொளியூராகிய அவிநாசியில் உள்ள மடுவிற் குளிக்கச் சென்று முதலையால் விழுங்கப்பட்டு இறந்த ஆதிசைவ அந்தணச் சிறுவனைத் தம் கெழுதகை நண்பர் சேரமான் பெருமாளைக் காண விரும்பி மலைநாடு நோக்கிச் செல்லும் நம்பியாரூரர், திருப்புக் கொளியூர் அவிநாசியென்னுந் தலத்தையணுகி வீதிவழியாகச் செல்லும் பொழுது ஒரு வீட்டில் மங்கலவொலியும் அதற்கு எதிர் வீட்டில் அழுகையொலியும் எழுதலைக்கேட்டு, அதன் காரணம் வினவியபோது ஒத்தவயதினராகிய அந்தணச் சிறுவர் இருவர் புக்கொளியூர்க் குளத்தில் குளித்து விளையாடிய நிலையில் அவ்விருவருள் ஒருவன் முதலையால் விழுங்கப்பட்டு இறந்தானாக இறவாது தப்பிய வளர்ந்த சிறுவனுக்கு முப்புரி நூலணி விழா நிகழ்தலால் மங்கல ஒலியும், அவனொடு சென்ற தம் மகன் முதலை வாய்ப்பட்டு இறவாது பிழைத்திருந்தால் அவனுக்கும் முப்புரி நூலணி நிகழ்த்தலாமே என எண்ணிப் பெற்ருேர் தம் மகனை நினைந்து அழுதலால் எதிர்வீட்டில் அழுகையொலியும் ஒப்ப நிகழ்ந்தன என்று அருகேயுள்ளார் சொல்ல அறிந்து சிந்தை கலங்கி நின்றார். அந்நிலையில் புதல்வன் இறந்தமை நினைந்து வருந்திய வேதியரும் அவர்தம் மனைவியாரும் நம்பியாரூரர் வருகையுணர்ந்து அழுகைநீங்கி முகமலர்ச்சியுடன் அங்கு ஓடிவந்து சுந்தரர் திருவடி களில் வீழ்ந்து வணங்கினார்கள். மகனையிழந்த துயரத்தையும் மறந்து

4