பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திருவெம்பாவை விளக்கம்

தானாகவே என்னிடத்து வந்து, தன் தலையளியை - தனிக்கருணையைச் செலுத்தி என்னை ஆட்கொண்டருளி னான் என்று கன்னியர் குறிப்பிடுகின்றனர், கும்பிடுவான் யாரென்று தேடுகின்றான் கோவிந்தன்” என்று திவ்யப் பிரபந்தமும், முழங்கும். உலக உயிர்களை உய்விக்கும் பொருட்டுத் தானே வந்து தலையளி செய்வது. சிவபெருமானது தடங்கருணைப் பெருந்திறத்தினையும், அடியவர்க்கருள எளியனாய் வந்து ஆட்கொள்ளும் அருட்டிறத்தினையும் பகரும். அவனுடைய ஒப்பற்ற பெருமைக்குரிய நீண்ட திருவடிகளைப் பாடிவந்துள்ள கன்னியர்கள், உள்ளே இருக்கும் கன்னியை நோக்கி * சிவன் திருவடிகளைப் பாடி வந்த எங்கட்கு உன்னுடைய வீட்டு வாயிற் கதவைத் திறக்கவில்லை. உன்னுடைய உடம்பு இறைவனுக்காக உருகி நிற்கும் மெய்ப்பாட்டினை யும் பெறவில்லை, உனக்கே இந்த நிலை பொருந்து வதாகும். எனவே இந்நிலையினை உடனே விட் டொழித்து, எங்களுக்கும் மற்றையோர்க்கும், ஏன் எல்லோருக்குமே தலைவனாயிருக்கின்ற சிவபெருமானைப் பாடுவாயாக’’ என்று கேட்டுக் கொள்கிறார்கள்,

வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்! ஊனே உருகாய் உனக்கே உறும். எமக்கும் ஏனோர்க்கும் தம் கோனைப் பாடல்’ (தகும்) என்றார்.

இங்குத் தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட் கொண்டருளும் வான்வார் கழல்’ என்ற அடிகள் நம்பியாரூரர் வரலாற்றை நினைவுபடுத்தும். புத்துார்ப் பெண்ணை மணம் முடிக்கவிருந்த சுந்தரரை வெண்ணெய் நல்லூர்ப்பித்தன் கிழவேடந்தாங்கி, வலியவந்து ஆட் கொண்ட திறத்தினைப் பெரியபுராணம் கொண்டு அறியலாம். மன்றுளிர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டதென்றார்’’. பித்தன் என்று தன்னை இகழ்ந்த நம்பியாரூரையே பித்தா பிறைகுடி பெருமானே