பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 திருவெம்பாவை விளக்கம்

மனவிருள் நீக்கி, சிவபெருமானின் அருளொளி பரவ வாய்ப்பாயிருப்பது இத்திருப்பாடலாகும். எனவேதான் துயிலின் பரிசு ஈதோ என்று வியப்பாள் போலத் தோழியின் செயலை எள்ளி நகையாடினர், அவளை அழைத்துப் போகவந்த கன்னியர்.

அன்னே! இவையுஞ்

சிலவோ? பல அமரர் உன்னற் கரியான்

ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச்

சிவன் என்றே வாய் திறப்பாய்! தென்னாஎன் னாமுன்னம்

தீசேர் மெழுகொப்பாய் என்னானை என்.அரையன்

இன்னமுதென் றெல்லோமுஞ் சொன்னோங்கேள் வெவ்வேறாய்.

இன்னங் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின்

பரிசேலோர் எம்பாவாய்!