பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்

கோழி! சிலம்பச்

சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப

இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி

கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள்

பாடினோங் கேட்டிலையோ? வாழியி தென்ன

உறக்கமோ? வாய் திறவாய்! ஆழியான் அன்புடைமை

ஆமாறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய்

கின்ற ஒருவனை ஏழைபங் காளனையே

பாடேலோர் எம்பாவாய்!

ஏழாவது திருப்பாட்டில் இறைவன் திருப்பெயரையும் அடையாளங்களையும் கேட்ட அளவில் நெஞ்சம் நெக் குருகி நிற்கும் மகளிரைக் காட்டிய மாணிக்கவாசகப் பெருமான், இத்திருப்பாட்டில் வைகறைப் போதில் 11.சாதியுள் மேலான சோதியாகவும் அருள் வடிவாகவும் விளங்கும் ஆண்டவனது புகழினை ஏத்திப் பாடுவதே பயிர்களுக்குரிய கடமையென்று உணர்த்துகின்றார்,

இந்தப் பாட்டில் ஒரு புதுமை, எழுப்ப வந்த கன்னியர் அனைவரும், எழுப்ப நின்ற கன்னியரை முன்னரே நன்கு அறிவராதலின் அவளை யாதொரு புகழ் மொழியோ அடையோ கூறி முன்னிலைப்படுத்தாமல், நாட்காலையில்