பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 திருவெம்பாவை விளக்கம்

உலகில் நிகழும் இயல்பான செயல்களை எடுத்துக் காட்டிப் பேசலுற்றார்கள். நேய நெருக்கமும் பழக்க மிகுதியும் உடையாரை எந்த விளியுமின்றி எடுத்த எடுப்பி

லேயே பேச முயல்வது உலக வழக்கன்றோ !

பொழுது புலர்ந்து விட்டது என்பதனை அறிவிக்கக் கோழி கூவுகிறது. மாணிக்கவாசகர் என்னும் ஆன்ம ஞானிதான் என்றில்லை, இருபதாம் நூற்றாண்டில் புரட்சிக் கவிஞர் என்று போற்றப் பெற்றவரான பாவேந்தர் பாரதிதாசன் கூடத் தம் எதிர்பாராத, முத்தம்’ என்னும் குறுங்காப்பியத்தில் பூங்கோதை, என்னும் கதைத் தலைவியின் பாத்திரத்தில் வைத்துப் பேசுவார் போல் சேவலுக்கும் இன்னும் என்ன தூக்கம்’ என்று குறிப்பிட்டார்.

தொன்னெடுங்காலந் தொட்டுச் சேவல் வைகறையிற் கூவுவது என்பது கோழி கூவப் பொழுது விடிந்தது’ என்று இலக்கணக் குறிப்பில் இடம்பெறும் அளவிற்குப் பழமையுடையதாகும், இ க் கே பூழி கூவும் கொக் கரக்கோ’ என்னும் ஒலியினைக் கேட்ட அளவில் எல்லா விடங்களிலும் சிறு பறவைகள் உடன் ஒலிக்கின்றன. திருக்கோயில்களில் திருப்பள்ளியெழுச்சிக் காலத்தை அறிவிக்கக் குழலூதப் பெறுதலும், வெள்ளிய சங்கங்கள் ஒலிக்கப் பெறுதலும் உண்டு. எல்லாவிடங்களிலும் அவ் வொலிகள் இப்பொழுது கேட்கின்றன. சிலப்பதிகாரம் யாத்த செம்மல் இளங்கோவடிகளாரும் ஊர்காண் காதையில் இதனைக் குறிப்பர். பாண்டிய மன்னனின் கோநகராம் மாநகர் மதுரையில் வாழும் மக்களைத் துயிலெழுப்ப, நுதல் விழி நாட்டத்து இறையோனாம் சிவபெருமான் திருக்கோயிலிலும், கருடக் கொடியை உயர்த்திய திருமால் கோயிலிலும் கலப்பைப் படையுடைய பலராமன் கோயிலிலும் கோழிச்சேவற் கொடியைக் கொண்ட முருகன் திருக்கோயிலிலும் அறத்துறையில் அசையாது வாழும் அறவோர் பள்ளியிலும், மறத்துறை.