பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. பைங்குவளைக் கார்மலரால்

பைங்குவளைக் கார்மலரால்

செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால்

பின்னும் அரவத்தால் தங்கண் மலங்கழுவு

வார் வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும்

எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற்

புகப்பாய்ந்து பாய்ந்துகஞ் சங்கஞ் சிலம்பச்

சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக்

குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந்

தாடேலோர் எம்பாவாய்.

நம் முன்னோர்கள் இயற்கையில் ஈடுபாடு மிக்கவர்கள். தொல்காப்பியனார் முதற்பொருள் என நிலத்தையும் பொழுதினையுமே குறித்தார். இயற்கையின் இனிய பின்னணியில் மனித வாழ்வு ஏற்றம் பெற்றது. இயற்கை என்னும் பின்புலம் இல்லாமல் பழந்தமிழ் இலக்கியங்களில் மனித வாழ்க்கை சித்திரிக்கப்படுவதில்லை. ஐவகை நிலத்திலும் வாழ்ந்த மக்களும் தத்தம் நிலக் கடவுளரை இனிய இயற்கைச் சூழலிலேயே வைத்துக் கண்டனர். அவ் வகையில் மாணிக்கவாசகப் பெருமான் இத்திருப்பாடலில் து அழகிய இயற்கை வருணனையினை நம்முன் கொண்டு வந்து காட்டுகின்றார். அவர் காட்டும் உவமை,