பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 திருவெம்பாவை விளக்கம்

உமையம்மைக்கும் பொருந்துகிறது; உமை கேள்வனாம் சிவனுக்கும் பொருந்துகிறது. ஏன்? இருவருக்குமேகூட ஒரு சேரப் பொருந்துகின்றது.

  • பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம் போதால் அங்கம் குருகு இனத்தால், பின்னும் அரவத் தால், தங்கண் மலங் கழுவுவார் வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த பொங்குமடு’’ என்பது தொடக்க வருணனையாகும்.

பிராட்டியார் உமையம்மையை வைத்து இவ் வருணனையைக் காணும்பொழுது பசுமை தங்கிய குவளை யாகிய கரிய மலர் போன்று கண்கள் உடைமையானும், சிவந்த தாமரை யாகிய அழகிய மலர் போன்று திருமுக முடைமையானும், கரங்களில் வளையல் தொகுதியாக அணிந்திருத்தலினானும், பின்னிய பாம்புகளை அணிகலன் களாக உடைமையானும், உயிர்கள் தங்களைப் பிணித் துள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் அழுக்குகளைப் போக்கிக் கொள்வதற்கு வேண்டி வந்தடைதலானும், எங்கள் தலைவியாகிய இறைவியாம் உமாதேவியாரை ஒத்த மடு இது என்பது பொருளாகின்றது.

அடுத்து சிவபெருமானை ஒக்கும் திறமாவது:

பசிய குவளையாகிய கரிய மலரையொத்த கழுத் துடைமையானும், சிவந்த தாமரையாகிய அழகிய மலரை யொத்த திருமுகம் உடைமையானும், உடலில் வெண்மை நிறம் வாய்ந்த வெண்ணிறு பூசியுள்ளமையானும், பின்னிய பாம்புகளை அணிகலன்களாக அணிந்துள்ளமையானும், உயிர்கள் தங்களைப் பிணித்துள்ள மூவகை அழுக்குகளைப் போக்கிக் கொள்ள வந்தடைதலானும், எ ங் க ள் தலைவனாகிய சிவபெருமானை யொத்துள்ளது இத்திருக் குளம் என்பது.

அடுத்து, பிராட்டியையும் பிரானையும் ஒக்கும் திறமாவது: