பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திருவெம்பாவை விளக்கம்

மிகவானான்’ என்றும் திருஞானசம்பந்தர் (வேணிபுரப் பதிகம் - 1) கூறியுள்ளமை கொண்டு அறியலாம். மேலும் மணிவாசகரே கோயில் மூத்த திருப்பதிகத்தில் (1) “ உ டையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி’ என்றும் குறிப்பிட்டுள்ளதனால் உமையொடு உடனுறையும் இறைவன் திறம் காணப் பெற்றோம்.

இத்திருப்பாட்டு, பாவைப்பாட்டின் உறுப்பாயுள்ள மழை வேண்டுதலைக் குறித்து நின்றதாகும். இத்திருப் பாட்டில் உமாதேவியாரை உடையாள், எம்மை யாளுடையாள், எம்பிராட்டி, நந்தம்மையாளுடையாள், அவள் என ஐமுறையாகப் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். ஐந்து வகையாக இறைவி குறிக்கப்படுவது அவள் ஐந்து சக்திகளாக அமைந்து உயிர்களுக் குப் பேரின்பத்தைக் கூட்டுதற்பொருட்டே என்பர். உலகின் நலம் குறித்து மழை பொழிவது போல, உயிர்கள் நலம் குறித்து அருள் பொழிய வேண்டும் என்று ஆண் டவனைக் கன்னியர் வேண்டினர் என்று கொள்ளலாம்.

அருளே யுலகெல்லாம் ஆள்விப்பது ஈசன் அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன்

எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவ தெனக்கு

என்ற காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதிப் பாடல் (9) இக்கருத்தை உணர்த்தும். மழை வேட்டலைக் குறித்தும் ஆண்டாள் திருப்பாவைப் திருப்பாட்டொன்றும் ஈண்டுக் கருதத்தக்கதாகும்.

ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல் ஆழியுட் புக்கு முகங்து கொடு ஆர் த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் பாழியங் தோளுடை பற்பநாபன் கையில்