பக்கம்:திருவெம்பாவை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 - திருவெம்பாவை

வீதிவாய்க் கேட்டலுமே, விம்மிவிம்மி, மெய்ம்மறந்து, போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்கன் ஏதேனும் ஆகாள், கிடந்தாள்என் னேஎன்னே ஈதேளம் தோழி பரிசு ஏலோர் எம்பாவாய்!

திருவெம்பாவையின் ஒவ்வொரு பாட்டும் ஏலோர் எம்பாவாய்' என்று முடியும். நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள். அதை எண்ணிப் பார்’ என்றும் பொருள் சொல்லலாம்.

ஏதேனும் ஆகாள் என்றது முன்னே சொன்ன விம்முதல், மெய்ம்மறத்தல், அமளியின்மேல் நின்றும் புரளுதல், முதலிய காரியங்களேக் குறித்தது. .

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ? வன்செவியோ கின்செவிதான்? மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே, விமமிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் கின்றும் புரண்டுஇங்கன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள்,என் னேஎன்னே! ஈதேஎம் தோழி பரிசுஏலோர் எம்பாவாய். (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/13&oldid=579206" இலிருந்து மீள்விக்கப்பட்டது