பக்கம்:திருவெம்பாவை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. விளையாடி ஏசும் இடம் ஈதோ?

அடுத்த வீட்டிற்குப் போகிருர்கள். அங்கே அந்தப் பெண் படுத் திருக்கிருள் அவளைப் பார்த்துப் பேசுகிருர்கள்,

கேரிழையாய்!

என்று அழைக்கிரு.ர்கள். அதற்கு இரண்டு பொருள் உண்டு. இரண்டு பக்கத்திலும் ஒத்த இழைகளை அணிந்தவள் என்பது ஒரு பொருள். மிகவும் நுண்ணிய ஆபரணங்களை அணிந்தவள் என்பது மற்ருெரு பொருள். இழை என்பதற்கு உருவகத் தால் குணம் என்று கொண்டு, நேர்மையாகிய பண்புகளே உடையாய்’ என்றும் பொருள் கொள்ளலாம்; "நவையறு குணங்களென்னும், பூனெலாம் பொறுத்த மேனி என்று கம்பன் பாடுவான். நேரிழையே, இரவும் பகலும் நாம் பேசும போதெல்லாம் என்னுடைய பாசம் பரஞ்சோ தியாகிய ஆண்டவனுக்கு என்று சொல்வாயே’’ என்று முதலில் தொடங்குகிருள். -

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய், இராப்பகல்காம் பேசும்போது.

பாசம் என்பது தம்பால் அன்பும், உறவும் உடையார்களிடத் தில் விடுவிக்க முடியாமல் கட்டுப்பட்டுக்கிடப்பது. இறைவ னிடத்தில் எந்தத் தடை வந்தாலும் மாருமல் ஒட்டிக் கிடக்கும் தன்மையை அந்தச் சொல் இங்கே வலியுறுத்து கிறது. இரவும் பகலும் எப்போது பேசினலும், "என்னுடைய பாசம் பரஞ்சோதிக்கு என்பாயே, இப்போது இந்த மலர் நிறைந்த படுக்கையினிடத்தில் எப்போது ஆசை வைத்தாய்?" என்று கேட்கிருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/14&oldid=579207" இலிருந்து மீள்விக்கப்பட்டது