பக்கம்:திருவெம்பாவை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4 திருவெம்பான்வ

எப்போதுஇப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ? படுக்கையில் நேசம் வைத்தது என்பது சிற்றின்ப வாழ்வு உடையவள் என்ற பொருளையும் குறிப்பாகத் தெரிவிக் கிறது. இதை நினைந்தவுடன் படுத்துக் கிடக்கிறவளுக்குக் கோபம் வந்துவிடுகிறது. நேசமும் என்ற உம்மையை அமளிக்கும் என்று பிரித்துக் கூட்டி அமைக்க. ‘.

என்னைப் போலவே நேரிழையை அணிந்த பெண்களே, இப்படியும் பேசலாமா? நாங்கள் விளையாட்டாகப் பேசு கிருேம் என்று நீங்கள் சொல்லலாம். இப்படிப் பேசுவது விளையாட்டா? இப்படி விளையாட்டாகப் பேசி ஏசும் இடம் இதுதான?”

- - கேரிழையீர், சீசி இவையும் சிலவோ? விளையாடி -

ஏசும் இடம் ஈதோ: "இறைவனுடைய திருப்பாதத்தினிடத்தில் உ ன க் கு ப் பற்றுதல் அதிகம் என்று சொல்கிறீர்களே, அவனுடைய பாத மலரிடத்து அன்பு தானே வருவதற்கரியது. அந்த மலர்போன்ற பாதத்தைப் புகழ்வதற்கு விண்ணுேர்களே கூசுகிரு.ர்கள்' என்கிருள்.

விண்ணுேர்கள் ஏத்துதற்குக்

சுசும் மலர்ப்பாதம்.

கண்ணும், பல்லும் கூசுவது வழக்கம். கண்ணுல் பேரொளி யைக் கண்டால் கண் கூசும். ஆண்டவனுடைய மலர்ப்

பாதம் தேவர்களால் துதிப்பதற்கு அடங்காமல் அவர் களுடைய வாயைக் கூசச் செய்கிறது. .. - .

விண்ளுேர்கள் ஏத்துதற்குக் கூகம் மலர்ப்பாதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/15&oldid=579208" இலிருந்து மீள்விக்கப்பட்டது