பக்கம்:திருவெம்பாவை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழையே பெய் 77

எம்பிராட்டி திருவடிமேற். பொன்அம் சிலம்பிற் சிலம்பி.

மேகங்களில் இந்திரவில் தெரிகிறது. வளந்துதோன்றும் அது அம்பிகையின் திருப்புருவம் போல விளங்குகின்றது.

திருப்புருவம் என்னச் சிலைகுலவி.

'நம்மையெல்லாம் ஆளாகக் கொண்ட அம்பிகை

தன்னினின்று பிரிவின்றி இருக்கின்ற எம் கோமாளுகிய சிவபெருமானுடைய அன்பர்களே எண்ணி அவள் நம் போன்ற அன்பர்களுக்கு முன் வழங்கும் இனிய திருவருளைப் போன்று, மழையே, நீ பொழிவாயாக!” -

கந்தம்மை ஆளுடையாள் - தன்னிற் பிரிவுஇலா எம்கோமான், அன்பர்க்கும் முன்னி அவள் நமக்கும் முன்சுரக்கும் இன்அருளே

என்னப் பொழியாய் மழைஏலோர் எம்மாவாய்!

அருளது சத்தியாகும் அரன்றனக்கு' என்பராதலின் இறைவனுடைய அன்பர்களுக்குப் அந்தச் சக்தியே அருள் புரிகிருள். . - .

"மழையே, முன்பு இந்தக் கடலை முகந்து இதைச் சுருங்கச் செய்து எழுந்து வானத்தில் சென்று பரவி நின்று எம்மை உடையவளாகிய அம்பிகையைப்போல நீல வண்ணத் தோடு விளங்கி, எம்மை ஆளுடைய அப் பெருமாட்டியின் சிறுகிய இடையைப் போல மின்னி விளங்கி, எம்பெருமாட்டி யின் திருவடிமேல் அணிந்த பொன்ன லாகிய அழகிய சிலம்பைப் போல ஒலித்து, அப்பிராட்டியின் அழகிய புருவத்தைப் போல இந்திர வில்லைப் போட்டு, நந்தம்மை ஆளாகக் கொண்ட அந்தத் தேவியினின்றும் பிரிதலின்றி உள்ள எம் கோமாளுகிய சிவபெருமானுடைய அன்பர்களுக் கும் ஒன்றுக்கும் பற்ருத நமக்கும் பெருங்கருணையால் நினைவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/78&oldid=579271" இலிருந்து மீள்விக்கப்பட்டது