பக்கம்:திருவெம்பாவை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. திருவெம்பர்வை

கூர்ந்து முன்னே வழங்கும் இனிய திருவருள் போலப் பொழி si rru frres!”

முதலில் கடலில் மேகங்கள் நீரை முகக்கின்றன. பல மேகங்கள் முகத்திலினல் கடல் நீர் குறைகிறது. முன் இக் கடலைச் சுருக்கி : இக் கடல் என்பதில் உள்ள சுட்டு, நெஞ்சறி சுட்டு. நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும். தடிந்துஎழிலி, தான் நல்கா தாகி விடின்” என்னும் குறளில் "தடிந்து என்பது போலச் சுருக்கி என்னும் சொல் வந்தது. தடிந்து என்பதற்குக் குறைத்து என்று பொருள் எழுதுவர் பரிமேலழகர். எழுந்து-எழும்பி வானத்திற் சென்று. உடையாள்-நம்மைச் செல்வமாக உடையவள்; ஸ்வாமிநீ என்று வடமொழியிற் கூறுவர். பெற்ற தாய்க்குப் பிள்ளைகளே சிறந்த ச்ெல்வமாதலின் அவர்கள் அம்பிகையின் உடைமை ப்ோன்றவர்கள். குழந் ைத கரே, "என் செல்வமே!’ என்று அழைக்கும். உலக வழக்கும் இங்கே நினைவு கூரத் தக்கது.

அம்பிகை நில நிறமுடையவ ளாதலின் மேகங்கன் அவளைப் போலத் திகழ்ந்தன, "நீல மேனி வாலிழை” என்று ஐங்குறுநூற்றில் வருவது காண்க. இட்டிடை-இடுகிய இடை பெண்களுக்கு இடை சிறுத்திருத்தல் அழகு; " சிற்றிடையாள்" என்பது செய்யுள் வழக்கு. அம்பிகையின் இடை மின்னலைப் போலச் சிறுத்துள்ளது. மின்னிடையாள்" என்ற வழக்கும் உண்டு. ஆதலின். 'ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்து' என்ருள்.

o அம்மை தன் திருவடிகளில் பொன்னலாகிய அழகிய

சிலம்புகளைப் புனைந்திருக்கிருள். அவள் நடக்கும் போது அவை கல் கல் என்று ஒலிக்கின்றன. சிலம்புகளினுள்ளே, பரல்கள் இருத்தலின் அத்தகைய ஒலி உண்டாகும். ஆதலால், எம்பிராட்டி திருவடிமேற் பொன்ன்ஞ் சிலம்பிற். சிலம்பி, என்ருள். பொன் அம் சிலம்பு-பொன்லைாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/79&oldid=579272" இலிருந்து மீள்விக்கப்பட்டது