பக்கம்:திருவெம்பாவை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழையே பெய் - 79

அழகிய சிலம்பு. இயற்கையாகவே பொற்சிலம்பு அழகிய தாயினும் இறைவியின் திருவடியில் அவை பின்னும் அழகு பெற்றுத் திகழ்கின்றன. அமிழ்தினைச் சுவைசெய்தென்ன அழ்கினுக் கழகு செய்தார்’’ (கோலங்காண் படலம்) என்று கம்பர் பாடுவது காண்க. -

அம்பிகையின் அழகிய புருவம் அங்க இலக்கணத்துக்கு ஏற்ப வளைந்திருக்கின்றன. வானவில்லாகிய இந்திர வில் வளைந்து, பார்க்கப் பார்க்க அழகு தருவது போல அன்னையின் புருவம் இலங்குகிறது. ஆகவே, திருப்புருவம் என்னச் சிலைகுலவி என்கிருள். குலவுதலாவது மேகத்தி னிடையே சேர்ந்து தோன்றுதல். நந்தம்மை என்றது. அவளால் ஆட்கொள்ளப் பெற்ற பெருமிதத்தைக் குறித்தது. அம்பிகையும் இறைவனும் வேறன்றி ஒன்றி இருப்பவர்கள். அவர்கள் பிரிவதே இல்லை. ஆதலின், 'தன்னிற் பிரிவிலா எம் கோமான்' என்கிருள். சிவ .ெ . ரு மா னி ட ம் பேரன்புடையவர்கள் ஆதலின், எம் கோமான் என்கிருள். கோமான்-தலைவன்; உலகில் பணி யாலும் பதவியாலும் தலைவர்களாக உள்ளவர்கள் யாவரிலும் உயர்ந்த தலைவன் அவன். கோமான் என்றும் கோமகன் என்றும் வழங்குபவை ஒரே பொருளை உடையன.

சிவபெருமானுடைய அன்பர்க்கு அவன் அருள் கிடைக் கிறது. அந்த அருள் இறைவியே யன்றி வேறு அன்று. சிவ பெருமான் சக்தன்; அவனிடம் உள்ள சக்தி அருள். அந்த அருளே சக்தி 'அருளது சத்தி யாகும் அரன்ற ைக்கு’’ என்று முன்பே காட்டப் பெற்றது. அன்பர்க்கும் நமக்கும் என்று சொன்னமையால், அன்பர்களின் தன்மை சிறிதும் இல்லாத நமக்கும் என்ற பொருள் கொள்வதற்குரியது. முன்னி-நம்மையும் ஒரு பொருளாக எண்ணி. முன் சுரக்கும் இன் அருள் : உவகை யெல்லாம் பாதுகாக்கும் அருளே யுடைய பிராட்டி முன்பாக நமக்கு இனிய அருளே வழங்கு. கிருள் என்றபடி. உணவு முதலியவற்றை வழங்குகிறவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/80&oldid=579273" இலிருந்து மீள்விக்கப்பட்டது