பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98


98 இந்த ஆசைக்கும் தடை தோன்றுகின்றது. கற்பகத் தைக் கருதிய காதலிக்குக் கண்ணன் அம் மரத்தைப் பெயர்த்துச் சென்றதுபோல் திருமலைக்கு வருகின்ற செல்வந்தர்களுள் யாரேனும் ஒருவர் சண்பகமரத்தை யும் பெயர்த்துக்கொண்டேகின் திருமலையின் வாழ்க் கையை இழக்கநேரிடுமே என்ற ஊகம் கால் கொள்ளு கின்றது. இவர் சிந்தனையில். ஒன்றுக்கும் உதவாத புல் பூண்டு செடி கொடியின் புதராக-தம்பகமாக-வேனும் இருந்தால் தனக்கு யாதொரு தீங்கும் நேரிடாது என்று எண்ணி, . "எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலையில் தம்பகமாய் கிற்கும் தவமுடையேன் ஆவேனே' என்று தம் விருப்பத்தைப் புலப்படுத்துகின்ருர், சிறிது யோசித்த அளவில் அதற்கும் ஒர் ஆபத்து உண்டு என்ப தாக எண்ணுகின்றது இவர் உள்ளம். காட்டுத்துறை யினர் செடிசெட்டுகளே அடிக்கடி சோதிக்கும் இயல் புடையவராதலால், அவர்கள் தம்பகத்தைக் களைந் தெறியக் கூடும்; அல்லது தீயிட்டு அதனை எரித்தலும் கூடும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. மலையின் ஒரு பகுதியாக இருப்பின் என்றும் மாருத ஒரே நிலையில் இருக்கலாமே என்று கருதுகின்ருர். உடனே "வேங்கடத் துள். அன்னனேய பொற்குவடாம் அருந்தவத்தன் ஆவேனே" என்று தன் நசையினை வெளியிடுகின்ருர். இந்தப் பாரிப்பும் மறையத் தொடங்குகின்றது. புதிய திருக்கோயில்களே நிறுவுவோர், பழைய கோயிலுக் குத் திருப்பணி புரிவோர், மலைமுகட்டுப் பாறைகளை உடைத்துக் கொண்டு போவாராதலால் அதுவும் தனக்கு 82. பெரு. திரு. 4:5 83. பெரு. திரு. 4:6