பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147


147 பக்திச் சுவை கிளர்ந்தெழச் செய்யும் இப்பாடல் மக்கள் மனத்தில் மாதவன் நிலையான இடம் பெற்றிருப்பது போலவே இடம் பெற்று விட்டது. இங்ங்னம், ஏழுமலையான்மீது எழுந்த பாடல்களே யன்றித் தனி நூல்களும் அவன்மீது எழுந்துள்ளன. அத் தனி நூல்களை ஆராய்வதே இன்றைய பொழிவின் நோக்கமாகும். இன்று நமக்குக்கிடைத்திருக்கும் நூல்கள் சிற்றிலக்கியங்களும் புராணங்களுமாகும். சிற்றிலக்கியங் களுள் குறிப்பிடத்தக்கவை இவை: 1. திருவேங்கடத் தந்தாதி 2. திருவேங்கடமாலை 3. திருவேங்கடக் கலம்பகம் 4. சேடமலை பதிற்றுப்பத்தந்தாதி. புராணங்களுள் நமக்குக் கிடைத்திருப்பவை: 1. திருவேங்கடத் தலபுராணம் 2. திருவேங்கட புராணம். என்ற இரண்டுமாகும். புராணங்கள் என்று கூறத்தக்க வாறு திருவேங்கடத்தின்மீது தமிழில் நூல்கள் இல்லை; அண்மைக் காலத்தில் வடமொழி மான்மியத்தை அடிப் படையாகக் கொண்டு அமைந்த திருவேங்கடத் தவ புராணம்’ என்ற ஒரே ஒரு நூல் உள்ளது. திருவேங்கட புராணம்’ என்ற நூல்பற்றிக் குறிப்புகள் உள்ளன. ஆனல், அந்த நூல் எனக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, கிடைத்திருக்கும் நூல்களைப்பற்றி இன்றைய பொழிவில் சில கருத்துகளை உங்கள்முன் வைக்கின்றேன். சிற்றிலக்கியங்கள் என்பவை தமிழில் வழங்கி வரும் பிரபந்தங்களாகும். இவை தொண்ணுாற்ருறு வகைப் படும் என்று கூறும் மரபு ஒன்று உண்டு. ஆனல் பிரபந் தங்களின் இலக்கணம் கூறும் பாட்டியல்நூல்களில் ஒன்றி