பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152


132 முனிகள் போன்ற ஆசாரியர்களுடைய அருளிச் செயல் களின் சிறப்புப் பொருள்களும் பொருந்தியிருப்பதைக் கண்டு களிக்கலாம்; அநுபவித்து மகிழலாம். இனி, இவர் திருவேங்கடம் சம்பந்தமாக அருளி யுள்ள இரண்டு நூல்களை ஆராய முற்படுவோம்.

1. திருவேங்கடத் தந்தாதி அன்பர்களே, முதலாவதாகத் திருவேங்கடத் தந்தாதி’பற்றிச் சிறிது ஆராய்வோம். இச்சிற்றிலக் கியம் திருவேங்கடமலைமீதும் அம்மலையில் கோயில் கொண்டிருக்கும் சீநிவாசன்மீதும் பாடப்பெற்றது. "அந்தாதி என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. முன்னின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும் அடியாயினும் அடுத்துவரும் செய்யுளின் முதலாக அமையும்படிப் பாடுவது. இங்ங்னம் பாடும் நூலினது ஈற்றுச் செய்யுளின் அந்தமே முதற் செய்யுளின் ஆதியாக அமைய வைப்பது. திருவேங்கடத் தந்தாதி என்ற நூல் அந்தாதித் தொடையாலமைந்த நூறு கட்டளைக் கலித்துறைகளால் அமைந்தது. இந் நூலிலுள்ள கவித்துறைகள் யாவும் பெரும்பாலும் திரிபு என்ற சொல்லணியும் யமகம் என்ற சொல்லணியும் அமைந்தவையாகும். இந்நூலில் நூலின் புறமாக முற்பகுதியில் சிறப்புப் பாரமாகச் செய்யுள் ஒன்றும், காப்புச் செய்யுளாக ஒன்றும், நூலின் இறு தி யி ல் த ற் சிறப்பு ப் பாயிரச் செய்யுள் ஒன்றும் ஆக 103 செய்யுட்கள் 6. இது வைணவ சம்பிரதாயத்தில் தனியன” எனப் படும். நூலினுள் அடங்காது தனியே பாயிரமாய் நிற்றல் பற்றியது அப்பெயர். அன் விகுதி உயர்வுப் பொருளது.