பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153


#53 உள்ளன. தான் திருவேங்கடமுடையான்மீது பர்டப் போகும் அந்தாதிப் பிரபந்தும் யாதொரு குற்றமும் இன்றி அமைவதற்குத் திருவருள் புரியுமாறு ஆழ்வார் களின் தலைவராகிய நம்மாழ்வாரை வேண்டுகின்ருர் ஆசிரியர். 'கல்ல வந்தாதி திருவேங் கடவற்கு நான் விளம்பச் சொல்ல வந்தாதின் வழுபொருட் சோர்வறச் சொல்வித்தருள்; பல்ல வந்தாதிசை வண்டார் குருகைப் பரசமயம் வெல்ல வந்தாதி மறைதமி ழாற்செய்த வித்தகனே.” |விளம்ப சொல்ல; சொல் அவம் - சொற்குற்றம்: தாதின் வழு வினேப்பகுதிகளின் குற்றம்; பொருள் சோர்வு - பொருள் குற்றம்; அற சிறிதுமின்றி, பல் லவம் - தளிர்; தாது - பூந்துகள்; குருகை - குருகூர் ; ஆதிமறை . வடமொழி வேதம்.) சொற்குற்றம் பொருட்குற்றமின்றிக் கவிபாடும் திறனைத் தனக்கு அருளுமாறு ஆசிரியர் ஆழ்வாரை வேண்டுவதைப் பாடலில் காணலாம். இந்த நூலில் பாதவகுப்பு: ஊர் போன்ற புறப் பொருள் துறைகளும், இரங்கல், தூது, அறத்தொடு நிற்றல், வெறி விலக்குப் போன்ற அகப்பொருள் துறை களும் அமைந்துள்ளன. சொல்லணிகளும் பொருளணி களும் செய்யுட்களுக்குப் பொலிவினைத் தருகின்றன. வைணவ தத்துவக்கருத்துகள் ஆங்காங்குக் காணப்பெறு கின்றன. எம்பெருமானின் திருக்குணங்களும் வெற்றிச் 7, காப்பு.