பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188


捻德 "தாவிவரும் வானரங்கள் தண்குவட்டில் கற்கடகம் மேவிவரக் கண்டோடும் வேங்கடமே." [குவடு-மலைச்சிகரம்; மேவி-பொருந்தி) என்பது கவிஞனின் வாக்கு. ஆண்யானையைப் பெண் யானே யாதோ ஒருகாரணத்தால் வெறுத்து வருகின்றது. இந்நிலையில் அது வானத்தில் வருகின்ற சிங்கவடிவான சிங்கராசியைக் கண்டு பேரச்சங்கொண்டு தானே வலியச் சென்று ஆண்யானையைத் தழுவுகின்றது." இளம் பெண் வடிவமான கன்னிராசி மலையுச்சியிலுள்ள மூங்கிலுக்கு நேராக வந்து பொருந்துங்கால் அது கம்பத்தின்மீது நடிக்கும் கழைக் கூத்தியைப் போல் திகழ்கின்றது." மற்று, ஒங்கி வளர்ந்திருக்கும் மூங்கிலுக்கு நேராகச் சுரு வடிவம் போன்ற மகர ராசி வருங்கால், அது மதன வேளின் சுறவக் கொடிபோல் காட்சியளிக்கின்றது." வானத்தில் செல்லுகின்ற நிறைகோல் வடிவான துலா ராசியினிடத்தில் ஒளிவிடும் இரத்தினங்களை வைத்து எடை காண்கின்றனர் மலைக்குறவர்கள்." திணைப்புனத் தைக் காக்கின்ற குறவர்கள் குளிர்மதியில் களங்கத் தோற்றமாக இலங்கும் மான்வடிவைக் கண்டு, அதனைத் தினபுனத்தை மேயவரும் மான் என்று கருதி வானத்தில் வில்வடிவாகக் காணப்பெறும் தனுசு ராசியைக் கை வில்லாகக் கொண்டு அம்பு எய்ய முயலுகின்றனர்." அம்புலியில் வாழும் மான் வேங்கடமலையில் அதிரும் குரலையும் திறந்த வாயையும் கொண்ட வெம்புலியைக் 71. பாடல் - 37 72. பாடல் - 18 73. பாடல் - 19 74. பாடல் - 22 75. பாடல் - 20 75 பாடல் . 21