பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197


#9% திருவேங்க.முடையானின் பெருமை : அன்பர்களே, இதுகாறும் திருவேங்கடமலையின் சிறப் பினைக் கண்டோம். இனி, திருவேங்கட முடையானின் பெருமையில் ஆழங்கால்படுவோம். வைணவதத்துவம், சித்து அசித்து ஈசுவரன் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பேசப்பெறும் என்று முன்னர்க் குறிப்பிட்டேன். சித்து என்பது, சீவான்மாக்களைப் பற்றியது. அசித்து என்பது, சீவான் மாக்கள் தங்கியிருக்கும் உடல், உயிரற்ற அகிலம், அதில் சேர்ந்த பொருள்கள் இவற்றை நுவலும். ஈசுவரன், இறை தத்துவத்தை எடுத்து இயம்பும்: அன்றியும், சித்தும் அசித்தும் இறைவனுக்கு உடலாக அமைந்திருப்பன என்று முப்பொருள்கட்குமுள்ள உற வினையும் எடுத்துக்கூறும் வைணவதத்துவம். இதனே, அசரீர-சரீரி பாவனை என்று வழங்குவர் வைணவப் பெரு மக்கள். இறைவன் பரம், வியூகம், விபவம், அந்தர் யாமித்துவம், அர்ச்சை என்ற நிலைகளிலும் உருவங் கொண்டு விளங்குவான் என்பதும் வைணவ தத்துவம் ஆகும் என்பது முன்னரே காட்டப்பெற்றது. இந்த நூலிள்ள நூறு பாடல்களின் பின்னிரண்டடிகளிலும் திருவேங்கட முடையானின் பெருமை பேசப்பெறு கின்றது என்று மேலே குறிப்பிட்டேன். அந்த எம் பெருமானின் பெருமைபற்றி ஒரளவு தெரிந்துகொள்ள முற்படுவோம். எம்பெருமானின் பெருமை பற்றிய கருத்துகளைப் பல பகுதிகளாக நிரல்படுத்திக் கூற முயல்கின்றேன். எம்பெருமானின் இருப்பு: எம்பெருமான் திருவுள்ளம் உவந்து தங்கியிருக்கும் இடம் நான்முகன் வாழ்கின்ற அண்டங்களுக்கும் மேல தாகவுள்ள பரமபதம் என்னும் இடமாகும்.