பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214


2#4 லும் அன்பையே வளர்க்கும் நோக்கம் உடையனவாகவும் உள்ளன. என்றபோதிலும், அவற்றுள்ளும் சில உறுப்பு கள் பொழுதுபோக்குக் குரியனவாகவே அமைந் துள்ளன. புலவர்களும் தம் திறமையொன்றையே வெளிப்படுத்த நினைத்து அன்பை மறந்து விடுகின்றனர். சொல்லடுக்குகளையும் சிலேடைகளையுமே கொண்டவர் களும் இல்லாமல் இல்லை. திருவேங்கடக் கலம்பகத்திலும் சிலேடை பெரிதும் காணப்பெறுகின்றது. எனினும், பெரும்பாலான பாடல்கள் அன்பைவளர்க்கும் பான்மை யுடையனவாகத் திகழ்கின்றன. கலம்பகப் பயன் அன்பைப் பெறுதலாக இருத்தல் வேண்டும் என்று குறிப் பிடத் தேவை இல்லை. நூலாசிரியர் : நூலைப்பற்றிக் கூறுவதற்கு முன்னர் நூலாசிரியரைப் பற்றிச் சில செய்திகளைக் கூற விரும்புகின்றேன். திரு வேங்கடக் கலம்பகத்து தூலாசிரியர் முத்தமிழ்க்கவி வீரராகவ முதலியார். இவர் அந்தகக் கவி வீரராகவ முதலியாரின் மகள் வயிற்றுப் பேரர். செங்கற்பட்டுக்கு அருகிலுள்ள பொன்விளைந்த களத்துார் இவரது ஊராகும். இவர் குழவிப் பருவத்தினராயிருந்த காலத் தில் இவரது அன்னையார் இவருடன் சோழநாட்டுக்குச் சென்று அங்குள்ள திருக்கண்ண மங்கை என்னும் திருமால் திருப்பதியின் அருகிலுள்ளதோர் ஆற்றின் நடுவில் குடிசை போட்டுக்கொண்டு வாழ்ந்து வரலா யினர். ஒருநாள் எதிர்பாராதவண்ணம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாய் அவ்வெள்ளத் திற்கு அஞ்சிக் குழந்தையை விட்டுவிட்டு ஒடிப்போய் விட்டதாக:வரலாறு. அதன்பிறகு அத்திவ்ய தேசத்தில்