பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229


229 தில் வலிமையுடையனவான பெரிய படங்களை' எழும் பச் செய்து, அந்த உருவழியாத பெரிய படங்களையெல் லாம் பனங்கள் என்னும் பெயருள்ளவாகக் காண் பித்தோம்). அதுமட்டுமா? கறுப்பான தோலேயும் (உடுக்க ஆடையின்றி)" இடையிலே புலித்தோலேயும் உடுத்துக்கொண்டுள்ள சிவனது இருப்பிடமாகிய வெள்ளி மலையையும், அவன் கையில் கொண்டுள்ள அந்தக் கல்லே யும் சிறந்த மாற்றுயர்ந்த பொன்கைச் செய்தோம். (கருநிறமுள்ள யானையையும் மாதங்கம்’ என்று வட மொழிப் பெயரை உடையதாகச் செய்தோம்; சிவனது இடப்பக்கத்தையும் உமாதேவியினது திருமேனி'யாகச் செய்தோம்; அல்லது சிவனது கைலாய மலையையும் வெண்பொன்' மயமாகச் செய்தோம். அச் சிவன் திரிபுர சங்கார காலத்தில் கையிலே கொண்ட வில்லாகிய அந்த மேருமலையையும் சிறந்த பொன் மயமா'கச் செய்தோம்") என்று இரசவாதிகள் தமது திறமையை ஒரு தலைவனுக்கு எடுத்துக் கூறுகின்றனர். தழை : தலைமகன் தன் குறையை முடித்து வைக்கும் பொருட் டுத் தோழியிடம் தான் கையுறையாகக் கொணர்ந்து கொடுத்த தழையை அவள் அருமையாக ஏற்றுக் கொள்ளுகின்ருள். அவள் தலைமகளிடம் சென்று அவள் குறிப்பறிந்து தழையை வியந்து உரைத்து அதனை ஏற்றுக் கொள்ளும்படி செய்கின்ருள். பின்னர்த் தலை 197 இரு பை எனப் பிரிக்க. பனங்கள்-பாம்பின்பட 198. தோல்-யான மாதங்கம்-யானை. 199. மாது-அங்கம்-உமையின் திருமேனி. 200. வெண்பொன்.வெள்ளி. 20. மாதங்கம்-சிறந்த பொன்,