பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11


# தும் நாம் அறிந்ததே யாகும். மேலே குறிப்பிட்ட நான்கு பாடல்களிலும், சாதாரணமாகக் கவிஞர்களிடம் காணப் பெறும் கற்பனை கூட இல்லை. மலைகளைக் கடந்து செல்லல் மட்டிலும் குன்று பல நீந்தி’ என்று கற்பனை நயம் தோன்றக் கூறப் பெற்றுள்ளதேயன்றி, பிற செய்திகள் உள்ளது உள்ளவாறே இயம்பப் பெற்றிருத்தலேக் காணலாம். ஈண்டு வரை என்பது கோடு அல்லது வரம்பு என்று பொருள்படும் சொல்லாகும். இச் சொல் லுக்கு மலே’ என்ற பொதுப்பொருளும் பொருந்தலாம். ஆயினும், வரை', 'நெடுவரை நெடுவரைப் பிறங்கிய வேங்கட வைப்பு என்ற சொல், சொற்ருெடர்களைக் கூர்ந்து நோக்குங்கால், இவற்ருல் குறிக்கப்பெறுவது "மலே’ என்ற பொதுப் பொருள் மட்டும் அன்று என்பதும், அது குறிப்பிட்ட ஒரு வகையைச் சேர்ந்த மலைத் தொடர்களைக் குறிக்கின்றன என்பதும் புலகுைம். "நெடுவரை என்பது குன்று அல்லது குன்றம்’ என்பதி னின்றும் பெரிதும் வேறுபட்டது. பிற்கால இலக் கியங்கள் இச் சொற்களைக் குழம்பிய நிலையில் தாறு மாருக்க் கையாண்டமையால் இன்றைய வழக்கில் அவை ஒருபொருட் பன்மொழிகளாக வழங்கி வருகின்றன. ஒன்ருேடொன்று ஒழுங்கற்ற நெருங்கிய நிலையில் இன்று நாம் காணும் திருப்பதி மலையைக் குன்றம் அல்லது குன்று’ என்று கூறலாம்; வேண்டுமானல் மலே’ என்ற பொதுப் பெயராகச் சொல்லி வைக்கலாம். ஆயின் எவ்வாற்ருனும் அதனை நெடுவரை' என்று சொல்லுவதற் கில்லை என்பதைத் தெளிவாக உணர்தல் வேண்டும். இதனுல்தான் மகாகவி பாரதியார் மாலவன் குன்றம்’ என்று கூறுகிருர் போலும்! மேற்கூறிய வருணனை விவரங்களைக் கைவிட்டாலும் திருப்பதி மலையை வடவேங்கடம் என்று இனம் காண்