பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


#3 பதில் மேலும் ஓர் இடர்ப்பாடு உண்டாகின்றது. நாட்டின் வடகிழக்கு மூலையிலுள்ள ஒரு சிறிய இடத்தை தமிழகத் தின் இரு கடல்கட்கும் இடையே நீண்டு கிடக்கும் ಕೆಂಡ್ತಿ பகுதியின் வடஎல்லையாகக் கூறுதல் யாங்ங்னம் பொருந் தும்? இதனைப் பேராசிரியர் டாக்டர் S. கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள், இங்ஙனம் கூறுவது பொருந்தா மையை முன்னரே நன்கு உணர்ந்து, தம்முடைய நூலில்’ இங்ஙனம் கூறுவர். "தமிழர்களின் தலைசிறந்த இலக்கண மாகத் திகழ்வது தொல்காப்பியம் ஆகும். இது காலத் தால் மிகவும் முற்பட்ட நூலாகும். இதில் தமிழகத்தின் எல்லே கூறப் பெற்றுள்ளது. இதில் வட எல்லையாக வேங்கடமும் தென் எல்லையாகக் குமரியும் கூறப் பெற் றுள்ளன. அக்காலத்தில் மேற்கிலும் கிழக்கிலும் கடல் களே தமிழகத்தின் எல்லேகளாக அமைந்திருந்தன. ஆகவே, "வடவேங்கடம்' என்று அடிக்கடிக் கூறுவதே ஒரு மரபாகி விட்டது. இதைத் தெளிவாக உணர வேண்டுமாயின், வேங்கடத்தைப்பற்றி இலக்கியங்களில் குறிப்பிடப் பெறும் இடங்களைக் கூர்ந்து நோக்கிப் பொருள் காண்டல் வேண்டும். ஒருவர் வடக்கிலுள்ள வேங்கடத்தைக் கடந்து சென்ருல் அப்பகுதிகளில் மக்கள் பேகம் மொழி முற்றிலும் வேறுபட்டிருக்கும் என்ற போக்கிலேயே அவ்விடங்கள் குறிப்பிடப் பெற்றிருப் பதை அறியலாம். சங்க இலக்கியங்களில் மொழி பெயர் தேஎம்” என்ற தொடர் எங்கணும் பெருவழக்காக ஆளப்பெற்றிருப்பதினின்றும் இதனைத் தெளியலாம். ஆகவே, அக் காலத்தில் தமிழர்கட்கு நன்கு பழக்க முடைய திருப்பதி மலையையே வேங்கடம் என்ற 8. A History of Tirupathi-vol 1 9. (எ.டு.) குறுந் 11, ஐங்குறு. 321; அகம். 67 முதலியவை, - - - - - -