பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263


263 தொடர்பு உண்டு. அக்காலத்திலும் இவரிடம் கவிதை இயற்றும் திறன் வள்ர்ந்தது. பின்னர் வேலூர் கண்டர் உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியராகப் பணி தொடங்கித் தொடர்ந்து இன்று வரையிலும் பணியாற்றி வருகிருர், பல்வேறு கவியரங்குகளிலும் வானெலிக் கவியரங்கு களிலும் இவருடைய கவிதைகளைக் கேட்டு மகிழ்ந்த பல்லாயிரக்கணக்கான சுவைஞர்களில் யானும் ஒருவன். திருவேங்கடமுடையான்மீது எழுந்த நூல்களேப் பற்றிய பேச்சில் இவருடைய ஒரு சில நூல்களைப் பற்றிக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமேயாகும். முதலில் 'திருப்பல்லாண்டில் இரண்டு பாடல்களைப் பார்ப்போம். 'பல்லாண்டு பல்லாண்டு! வேங்கடக் குன்றின் பயின்ருேங்கு நீல முகிலே! பல்லாண்டு பல்லாண்டு நின்கொற்ற மார்பிற் படிந்தோங்கு கருணை வடிவே.” இஃது இச்சிறு நூலின் முதற் பாடல். வேங்கட வனுக்கும் அவன் திருமார்பில் அகலகில்லேன் இறையும்’ என்று அகலாதிருக்கும் அலர் மேல் மங்கைக்கும் பல்லாண்டு பாடுகின்ருர் ஆசிரியர். அடுத்த பாடலிலும் ஏழுமலையான் மார்பில் இருக் கும் பெரிய பிராட்டியாருக்குப் பல்லாண்டு பாடுவதைக் காண்கின்ருேம். "சீலம் இன்றி நோன்பின்றிச் செறிவும் இன்றி உயிர்க்கூட்டம் ஞாலம் வருந்தப் புரிகின்ற நலிவை கினைந்து கின்னுள்ளத்துச்