பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285


283 குறையவில்லை. எல்லாமட்டங்களிலும் நல்லாசிரியர்களைப் பெறும் பேறும் கிடைத்தது. பெரிய புதிய போக்குகளின் விவரங்களை அறிய வாய்ப்பு பெருவிடினும், அப்போக்கு களின் பலன்களை ஒரளவு அறிந்து கொண்டுதான் வருகின்றேன். அறிவியல் கருத்துகள் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் இவர்களிடையே பரவு வதற்கு அவ்வப்போது சிறுசிறு நூல்கள் எழுதி வருகின்றேன். காரைக்குடி வாழ்வும் திருப்பதி வாழ்வும் இப்பணிக்கு ஒய்வையும் உற்சாகத்தையும் அளித்தன. அது கிடக்க. இங்ங்னம் அறிவியலில் நாட்டங் கொண்ட என்னைத் தமிழன்னை ஆட்கொண்டாள். 1940லிருந்து பல்லாண்டு களாக அவள் மடியில் கிடந்துகொண்டு கொஞ்சி அவள் அன்பைப் பெற்று வருகின்றேன். இன்னும் அவளுடைய பரந்த செல்வத்தையெல்லாம் பெறும் பேறு பெற்றேன் அல்லேன். அவளுடைய அன்பினலேயே அறிவியல் நூல் களே எழுத முடிந்தது. அந்நூல்களே அவள் திருவடியி லேயே வைத்து வணங்குகின்றேன். வாழ்க்கையில் இறைவன் என்னைப் பல சோதனை கட்கு உட்படுத்தி வருகின்ருன். ஆனால், அச்சோதனை களைத் தாக்குப் பிடிக்கும் திராணியையும் எனக்கு அளித் துள்ளான். எந்த இக்கட்டுகளிடையேயும் கடுமையான உழைப்பினை மேற்கொள்ளும் மனநிலையையும் பெற்றி ருப்பது அவனது அருளாலேயாகும். கிட்டத்தட்ட என்னுடைய பதவியின் இறுதிக் காலத்தில் திருப்பதி என்னும் திவ்வியதேசத்தில் வாழும் பேற்றையும் அளித் துள்ளான். இது பெறற்கரியபேறு எனக் கருதுகின்றேன். ஏழுமலையானே "இந்தப் பொழிவுத் தொடர்களின் பொருள்பற்றி ‘மூன்று உரைகள்’ நிகழ்த்துமாறு பணித்ததாகவே கருதுகின்றேன். அவனிட்ட வழக்கை