பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


34 "பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கைக் கெடா நல்லிசைத் தென்னன்." (ஆ.பசு அருகுறும்பு அரிய அரண் படு-வந்து கூடும்; செரு-போர்; செல்-இடி; இசை-புகழ், தென்னன். பாண்டியன்.) "வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை மறப்போர் பாண்டியர்.' பயந்த-அளித்த.) என்ற மதுரைக் கணக்காயனரின் கூற்றுகளால் மேற் கண்ட செய்திகளே அறியலாம். இதல்ை யாதோ ஒரு வகையால் புல்லி பாண்டியர் குலத்தோடு தொடர் புடையவனுதல் தெரிகின்றது. புல்லி ஆண்ட வேங்கட நாடு வேழங்கள் மலிந்த நாடு. வேங்கடத்தில் கொண்ட வெங்கோட்டு யானைகளை உடையது பாண்டியர் படை என்று மதுரைக் கணக்காயர் கூறுவதையும் காண்க. புல்லி ஆண்ட நாட்டைச் சார்ந்த வீரர்கள் தாம் வாங்கும் பொருள்களுக்கெல்லாம் யானைகளையும் யானைக் கோடுகளையுமே விலையாகக் கொடுப்பர். இந்த வீரர்கள் தம் நாட்டையடுத்த காட்டினுள் புகுந்து பெண்யானை கள் வருந்துமாறு அவற்றின் கன்றுகளைக் கைப்பற்றுவர். அவற்றை வெண்கடம்ப மரக்கிளேயினின்றும் உரித் தெடுத்த நாரால் ஆன கயிற்ருல் கட்டிக் கொணர்ந்து, தம் ஊரில் உள்ள கள்ளுக் கடைகளின் வாயிலிடத்தே தாம் வாங்கி உண்ட கள்ளின் விலையாகக் கட்டிப் போவர். 44. அகம்-342. 45. அகம்-27.