பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


35 'கறையடி மடப்பிடி கானத் தலறக் களிற்றுக்கன் ருெழித்த உவகையர் கலிசிறந்து கருங்கால் மாஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து பெரும்பொளி வெண்ளுர் அழுந்துபடப் பூட்டி நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர் கறவுகொடை கல்லில் புதவுமுதற் பிணிக்கும் கல்லா இளையர் பெருமகன் புல்லி.' (கறை-உரல்; பிடி-பெண்யானை, ஒழித்த-பிரித்துக் கொண்ட, கலி-செருக்கு; கருங்கால் மரம்-கடம்ப மரம்; கொழுகொம்புவளவிய கிளை; பெரும்பொளி.பெரிதாக உரித்த, வெள்நார்-வெள்ளிய நார்; பூட்டி-கட்டி; நுடங்கும்.அசையும்; நியமம்-அங்காடி, நறவு-கள்; கொடை-விற்கும்; புதவு முதல். வாயில்.) என்ற கல்லாடனர் பாட்டால் இதனே அறியலாம். வீரர்களின் செயலோடு நாம் வீரர்களின் தலைவனுகிய புல்லியின் செயலையும் அறிந்துகொள்ள விழைவது இயல்பேயன்ருே மாமூலனர் கூறுவதைக் கேட்போம்: 'உருமெனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால் வளிமாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ அருகிறத் தழுத்திய அம்பினர் பலருடன் அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுகொடை கெல்லின் நாண்மகிழ் அயரும் கழல்பு:ன திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வயக்கிய மாவண் புல்லி.' (உரும்-இடி; சிலைக்கும்-ஒலிக்கும்; நோன் ஞாண். வலிய நாண், வன்சிலை-வலிய வில்; நிறம்-மார்பு; அண்ணல்-தலைமை வாய்ந்த; கோடு.கொம்பு, நறவு. 46. அகம்-83. 47. அகம்-61,