பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமரைச் செல்வர் கெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் (துணை வேந்தர், சென்னைப் பல்கலைக் கழகம்) அணிந்துரை சென்னைப் பல்கலைக் கழகம் மூத்த இந்தியப் பல்கலைக் கழகங்கள் மூன்றினில் ஒன்று. அது நூற்றுப் பதினெட்டு வயதானது. அதன் நீண்ட வரலாற்றில் பெற்ற அறக் கட்டங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று சொல்லின் செல்வர் பேராசிரியர் டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை வெள்ளி விழா அறக்கட்டளையாகும். அக்கட்டளையின் சார்பில் பல நல்லறிஞர்கள் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றி யுள்ளனர். அம் மரபினை யொட்டி, திருப்பதி, திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர், தமிழ்த் துறைத் த ல்ை வ ர் டாக்டர். 5. சுப்புரெட்டியார் அவர்கள் 1973-74 ஆம் ஆண்டிற்கான மூன்று சொற்பொழிவுகளே ஆற்றினர். டாக்டர் ந. சுப்புரெட்டியார் முறையாகத் தமிழைக் கற்றுத் தேறிய அறிஞர். ஆழ்ந்த புலமையும் கட்டுரைத் திறனும் சொல்லாற்றலும் மிக்கவர். "திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்’ என்னும் தலைப்பில் டாக்டர் ரெட்டியார் ஆற்றிய சொற்பொழிவுகள், நம்மைச்