பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63


63 இரண்டாவது கோயில் திருமலையில் இல்லையே என்று கூறுவது (இரண்டாம் பாடல்). முதற் பாடலின் பொருளை நோக்கும்போதே பூதத் தாழ்வார் மலையை இளங்கிரி என்று குறிப்பிடவில்லை என்பது தெரியவரும். மேற்குறிப்பிட்ட பாட்டில் திரு மலையை ஆழ்வார் ஒரு ச்மத்காரம் பொலிய வருணித் திருப்பது மேல்நோக்காகப் பார்ப்பவர்க்கே தெரியவரும், திருமலை யாத்திரையாக வரும் பெரியார்கள் பலர், “வெறியார் தண்சோலைத் திருவேங் கடமலைமேல் நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேன் ஆவேனே." என்று குலசேகரப் பெருமாள் விரும்பினபடி, திருமலை ஏறும் வழியில் அன்பு வைத்து, திருமலை மேல் சென்று வாழ்வதைக் காட்டிலும், திருமலை வழியில் கிடப் பதையே பெரும்பேருகக் கொண்டு அவ் வழியிலேயே வீற்றிருந்து எம்பெருமானைச் சிந்தை செய்கின்றனர். அப்போது மூச்சுவிடுதல் உடம்பு அசைத்தல் முதலிய ஒன்றுமின்றி வால்மீகி போன்ற மாமுனிவர்களைப் போல் யோக நிலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அவர்கள் கூந்தல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்திருப்பதைக் கண்ட பூங்கொடிகள் அவர்களை வீற்றிருக்கும் மனிதர் கள்’ என்று தெரிந்து கொள்ளாமல், இவை சிறுமலைகள்' என்று எண்ணி அவற்றின்மீது படர்கின்றன. இங்ங்னம் பக்தர்கள் மேலும் பூங்கொடிகள் படர்ந் திருப்பது அற்புதமான காட்சியாக அமைகின்றது. இப் படிப்பட்ட காட்சிக்கு இடமான திருமலையே நாம் விரும் பும் திருமலையாகும். இங்கு வழியில் வீற்றிருக்கும் பெரியார்களை இளங்கிரி (சின்னமலை) எனக் கூறிஞரே யன்றி மலையை அன்று என்பது அறியத்தக்கது. எனவே, 9, பெரு. திரு. 4:8. ---------------------11:37, 19 பெப்ரவரி 2016 (UTC)~-------,