பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77


77 "குன்றம் ஏக்திக் குளிர்மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர்திரு வேங்கட மாமலை’’’ என்று அருளிச் செய்வர். இக் கருத்தை உட்கொண்டே சுவாமி தேசிகனும், 'விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு வேங்கடவெற் பெனவிளங்கும் வேத வெற்பே' என்ற அடிகளில் வேத வெற்பு’ எனப் போற்றி யுரைத் தனர் போலும். - மூன்ருவது காரணம் : "வீங்கு நீர் அருவி......... நின்ற வண்ணமும்' என்ற பகுதி இடைச் செருகல் என்று கூறிய கூற்றுபற்றி முதற் பொழிவில் விளக்கினேன். அதனை ஈண்டு நினைவு கூர வேண்டுகின்றேன். "பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்” இராமாநுசர் எம்பெருமானின் திருமேனியில் நிறுவிய பின்புதான் திருவேங்கடம் திருமால் திருப்பதி யானது என்று கருதுவது தவருனது என்பதையும் காட்டு வேன். இது பழைய தமிழ் நூல்களையேனும் வழக்குகளே யேனும் அறியாமல் கூறியதாகும். இராமாநுசருக்கு முன் பிருந்த ஆழ்வார் பெருமக்கள் திருவேங்கடமுட்ை யானைத் திருமாலாகவே பாடியதை நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும். “தாழ்சடையும் நீள் முடியும்' என்று தொடங்கும் பேயாழ்வார் பாடல், அரி-அரன் 38. திருவாய், 3. 3: 8. 39. தேசிக. பிரபந்-82. 40. மூன்ரும் திருவந்-63