பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81


81 (6) ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வாரும், "திருவேங்கடம் நங்கட்குச் சமன்கொள் வீடுதரும் தடங் குன்றமே" என்று போற்றியுரைப்பர். . . (7) முன்னேர் கூறின மரபை நன்குணர்ந்த சிவப் பிரகாச அடிகளும் தாம் பாடிய சீகாளத்திப் புராணத் தில், 'அரவணைச் செல்வன் வாழும் அந்தமிழ் கிலத்தின் எல்லைத் திருமலை கண்டு ணர்ந்தோர் செறிவினைத் தொடர் அறுக்கும் பெருமலை கண்டிறைஞ்சிப் - பிறங்குவெள் ளருவி தாழும் பொருவரும் ஏமகூடப் பொருப்பினை இனிது கண்டான்.' என்று பாடியுள்ளார். (8) திருவேங்கடத்துக் கோயில் காப்பவராக முருக வேள் அமைந்துள்ளார் என்று கூறப் பெறுவதற்கேற்ப அத் திருமலைச் செவ்வேளை அருணகிரியார் பாடியுள் ளனர் என்பதை நாம் அறிவோம். ஆயினும், அவர் திரு வாஞ்சியத்தைப் பற்றின. 'இபமாந்தர் சக்ரபதி' என்ற திருப்புகழில், வேங்கடத்து அண்ணலைப் பிரசித்த நெடியவன்' என்றும் உயர்சார்ங்க சக்ரகரதலன்' என்றும் கூறியுள்ளமை கருதத்தக்கது. இதல்ை அப் பெரியார் திருவுள்ளத்திலும் திருவேங்கடம் குறிஞ்சித் தெய்வமாகிய செவ்வேளுக்குரிய தாயினும், அது திருமாலின் புகழ்பெற்ற திருக்கோயில்களில் ஒன்ருக இருப்பது பெறப்படும். - 49. திருவாய். 3.3:7. 50. சீகாளத்திப் புராணம்