பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 5 திருவேங்கட மாயோன் மாலை தானந்த ருமபி தானந்தருமுயர் சாதித ரும்பெருங் கியாதி தரும் ஞானந்த ருந்திரு மந்திர மீதென நம்புமி னோநமோ நாராய ணாய. 2. திருமந்திரப் பதிகம் காப்பு நன்று மோநமோ நாராய ணாயவென் றென்று மோதுவோர் யாரேனு மாகமுன் சென்று பாதமே வீழாத தீயர்கள் மன்று ளேறவே வாராது பாடலே. நூல் 1. வான்சொலு மண்சொலும் வண்டிசை மாமுகன் றான்ச்ொலு நான்மறை தாஞ்சொலு மங்கொரு தேன்சொலி பங்கன் றினஞ்சொலு மந்திரம் நான்சொலு மோநமோ நாராய னாயவே. 2. வெல்வதுந் தீவினை வெம்மறம் வெரறக் கல்வதும் யாவரும் கற்பதும் நற்கலை சொல்வதுந் தேவர் துதிப்பதும் யாவைக்கும் நல்லது மோ நமோ நாராய ணாயவே. 5. வானம் - தேவருலகு, வையம் - பூவுலகு, வெலும் - வெல்லும்; மானம் - பெருமை; வெகுமானம் - வெகுமதி, பரிசு; அபிதானம் - பெயர்: கியாதி-புகழ். திருமந்திரப் பதிகம் காப்பு : யாரேனும் - எவரேனும், எத்தகையவரேனும். 1. வான் - வானுலகம்; திசைமாமுகன் - பிரமன், நான்மறை - நான்கு வேதம்: இருக்கு, யஜுர், சாமம் அதர்வணம்:தேன்சொரி பங்கன்-தேன்ப்ோல் மொழி யுடையாளான உமையை ஒருபாகத்துக் கொண்ட சிவன். 2. மறம் - பாவம்: கல்வது-தோண்டுவது, யாவைக்கும் எல்லாவற்றிற்கும்.