பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவையங்கார் 37 3. வேதமும் வேதியர் மெய்மையு மெய்மையுட் போதமும் போதத்திற் பொங்கியசித்தியின் பேதமும் பேதப் பிணக்கறுக் கும்பர நாதமு மோநமோ நாராய ணாயவே. தொட்டதும் பரமனைத் தொட்டவ னடியரை யிட்டதும் வீட்டினி லிருப்பது மறைச்சிரங் கட்டது மிருவினைக் கல்வியை நெஞ்சினி னட்டதுமோ நமோ நாராய ண்ாயவே. பொற்பொருள் பொருளிலே பொன்மகள் காதல்செய் சிற்பரம் பொருளினைத் திருமணங் கொல்லையின் மற்பர காலன்முன் மறித்துப் பறித்திட்ட நற்பொரு ளோநமோ நாராய ணாயவே. தானமுந் தானப் பயனுந் தனிச்சோம பானமும் வேள்வியும் பத்தியுஞ் சித்தியும் மோனமும் மோன வரம்பின் முளைத்தெழும் ஞானமு மோ நமோ நாராய ணாயவே. சடத்துவ மறவொளி தருவது முனிவர் நெஞ் சிடத்துவந் திருப்பதோ டிரும்பவக் கடலிடர் கடத்துவ தகிலமுங் கருதிய முறையினி னடத்துவ தோநம்ோ நாராய னாயவே. l போதம் - அறிவு; பரநாதம் - மேலான ஒலி. பரமன் - இறைவன்; மறைச்சிரம் - வேதமுடிவு: நட்டது - ஊன்றியது. - பொன்மகள் - திருமகள்; திருமண்ங்கொல்லை - திருமணங்கொல்லை என்னும் ஊர்; ப்ர்காலன்-திரு மங்கையாழ்வார். - -- - சோமபாணம் - சோமயாகத்தில் சோமரசம் பருகுகை பத்தி-பக்தி:சித்தி- பேறு. சடத்துவம் - அறிவின்மை; அகிலம்-எல்லாம் தி.-3