பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதியர் எச்ச தத்தன் மகன் விசாசரருமன், ஒரு நாள், பசுக்களை மேய்த்துக் கொண்டு சென்ற ஒருவனைப் பார்த்தார் அவர். அவன் பசுக்களை அடித் தான்; துன்புறுத்தினான், வாயில்லாத அவை கண்ணிர் வடித்தன.

கண்டார் விசாரசருமன். மனமிளகினார்.

‘பசு எத்தகைய அருமையான உயிர்! அதனைத் துன்புறுத்தலாமா? என்று இரங்கினார்.

மேய்ப்பவனை அழைத்தார். ‘ஆனிரையை நானே இனி மேய்க்கிறேன்!” என்றார்.

அவ்விதமே அப்பணியை மேற்கொண்டார். பசுக்கள் இவர்தம் அன்பிலே திளைத்து, பாலைப் பெருக்கின. இந்தப் பாலை விசாரசருமர் என்ன செய்தார்?

மண்ணிலே லிங்கமொன்று செய்தார். அத்திமரத்தடியில் நிழலிலிருக்கும்படி லிங்கத்தைச் செய்தார். அதற்குப் பாலை அபிஷேகம் செய்தார். இது ஒரு நாளா. இரண்டு நாளா? இல்லை, இல்லை! தினமும் செய்வார்.

பாலை இங்கே கொடுத்துவிட்ட பசுக்கள் வீட்டிலே என்ன செய்தன? உரியவர் வீட்டிலேயும் பாலைப் பெருக்கின எங்கும் பாலாறு ஓடியது.

இது கண்டனர் அந்தணர். பொறாமையுற்றனர். தந்தை யிடம் ஏதேதோ கூறினர். எச்சதத்தனும் கொஞ்சம் கலங்கினான். ஒரு நாள் மரத்தின் மேலேறி ஒளிந்துக் கொண்டான் தன் மகனைக் கண்காணிக்க, மகன் செய்கையைக் கண்டான்; வெகுண்டான்: ஒரே குதி. பால் குடங்களை உதைத்தான். விசாரசருமன் பக்கத்திலிருந்த கோலை எடுத்தான். தந்தையின் கால்களை வெட்டி மீண்டும் பூசையில் ஆழ்ந்தான்.

96