பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் தம் இளமை பழக்க வழக்கங்களே சான்றாக அமைந்தன.

‘யான் விடியற் காலத்தில் எழுவேன்; பழம் பாடங் களைப் படிப்பேன்; புதிய பாடங்களையும் நெட்டி நெட்டிப் பார்ப்பேன்; விளங்காத இடங்களை இராயப் பேட்டையில் வதியும் நல்லாசிரியரை அணுகித் தெளிவு செய்து கொள் வேன். அவைகள் பின்னே பள்ளிக்கூடத்தில் போதிக்கப் படுங்கால் பழமையாகவே தோன்றும். எக் கூத்தாடினாலும் யான் படிப்பில் கண்ணுங் கருத்துமாயிருப்பேன்.”*

இயற்கை உருவாக்கிய சேய்

இயற்கையே என்னை உருவாக்கியது என்பான் ஆங்கிலப் பெருங்கவிஞன் வில்லியம் வெர்ட்ஸ் வொர்த். திரு.வி.க வை உருவாக்கியதும் இயற்கையே. இயற்கையே அன்னை; இயற் கையே ஆண்டவன்: இயற்கையே எல்லா தத்துவங்களுக்கும் பிறப்பிடம்.

இயற்கையே பெரும்பள்ளி. மிகப்பெரிய பல்கலைக் கழகம். பொதுமை-அறம், அந்தம்-எல்லாம் ஒன்றே என்ற மாபெரும் தத்துவத்தை ஒதும் பெரிய ஆசான்.

இயற்கை திரு. வி. கவை மாற்ற வேண்டிய நேரங்களில் மாற்றியது. அதேசமயம் திரு வி.கவின் அறிவைத் தீட்டியது: பட்டை தீட்டாத வைரமாக இருந்த அவர் தம் அறிவு பட்டை தீட்டப் பட்டது! பற்பல நிறங்கள் பற்பல சாலங்கள் புரியும் அறிவுச் சிதறல்கள் சிதறின.

இதை எவ்வாறு சாட்சியின்றி கூறுவது? சாட்சியா இல்லை! திரு. வி. கவின் கன்னி நூல் எனப்படும் “கதிரைவேற்பிள்ளை சரிதமே இதற்குச் சிறந்த அத்தாட்சி.

திரு. வி. க. தம் மாணாக்கர் பருவ விளையாட்டுகளை விவரிக்கிறார். நாமும் அந்த விளையாட்டில் சேருவோமா?

  • வாழ்க்கைக் குறிப்பு, பகுதி 1, பக். 34,
0