பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வற்றை இந்து சமயத்தில் புகுத்தினர்; பல முனிசள் பேரில் பற்பல சம்பிரதாயங்கள், சாத்திரங்கள் என எழுதிக் குவித்தனர்!

இந்தியாவை அழித்தது இவர்கள் செயல். இத்தகைய சாத்திரங்கள் இயற்கை வாழ்வினின்று மக்களை வலுக் கட்டாயமாகப் பிரித்தன. சகோதர நேயத்திற்கு அடிகோலிய நம் நாட்டில் தீண்டாமை, உயர் சாதி, தாழ்ந்த சாதி போன்ற தீமைகள் புகுந்து, நாட்டை வீழ்ச்சியடையச் செய்தன.

இந்தியாவும் இஸ்லாமும்

இந்நாட்டுடன் வாணிபத் தொடர்பு சொண்டவர்கள் அராபியர். தங்கள் மதமான இஸ்லாத்தை இந்தியாவில் பரப்ப வேண்டும் என்ற பேராவலை இந்நாட்டின் சமய சூழ்நிலை ஏற்படுத்தியது. இதனால்தான் ஏழாம் நூற் றாண்டில் மகமத் காஸிம் சிந்துவைக் கைப்பற்றினார் என்றால் மிகையே அல்ல. இதனை அடுத்து எத்தனையோ படையெடுப்புகள்! கஜினி படையெடுப்புகளுக்குப் பின் கோரி வம்சம் இந்தியாவில் நிலையான அரசை நிறுவியது.

இதுவே முஸ்லீம் உலகம் இந்தியாவில் கால் வைத்து, ஊன்றிய காலம். மொகலாயப் பேரரசுக்கும் முன்னோடி யாக அமைந்தது.

அக்பரின் சமரசம்

மொகலாயர்களிலே சமரச மனப்பான்மை கொண்ட அக்பரை மறக்க இயலுமா? அவரது சமரசக் கொள்கைஇந்து முஸ்லீம் சகோதரத்வம் ஏற்பட வித்திட்டது. ஒற்றுமைக்குரிய கலப்பு மனங்களை நாடு கண்டது: ஆதரித்தது; ஏற்றது.

அக்பரின் பரந்த சமய நோக்குக்கு ஒரு அரிய சான்றாக உள்ளது துளசிதாஸ் இராமாயணம். துளசிதாஸ், குமர குருபரர் காசியில் கம்ப இராமாயணத்தைப் பிரசங்கம்

144