பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பதவியிலிருப்போரும் அவரை மேற்பார்வையிடு வோரும் ஒரே கூட்டத்தவர் ஆயின் நீதி எங்ஙனம் விளையும்? எங்ஙனம் வளரும்?’’’

ஆங்கிலேயரின் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட போது கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், இன்று அதைத் தவிர்க்க சீர்திருத்தச் சட்டத்தை ஏற்றதா? நீதியையும் நிர்வாகத்தையும் தனித்தனியே பிரித்ததா? இல்லையே!

இது மட்டுமல்லவே. நாளாக ஆக அதன்கண் முதலாளி செல்வாக்கும் புகுந்து கொண்டது. காங்கிரஸ் பம்பாய் முதலாளிகள் வாய்பட்டுக் கிடந்தது வரலாறு அறிந்த உண்மை.

இந்து முஸ்லிம் பிணக்கு

முதல் சத்தியாக்கிரகத்திற்குப் பின் காந்தியடிகள் தீண் டாமை விலக்கலில் தலைப்பட்டது, முஸ்லீம் வீக்குக்கு ஐயத்தை ஏற்படுத்தியது.

ஜின்னாவின் லீக் காங்கிரஸுடன் பழையபடி இணைந் திருக்கவில்லை. காரணம் அறிய முடியுமோ?

இந்த ஐயத்திற்குப் பின் சுயராஜ்யத்திற்குப் பாடுபட்ட இரு பெரிய இயக்கங்களும் பிரிந்தன: முன்பிருந்த தொடர்பு அறுந்தது, அறுந்தே போயிற்று. அதைத் தொடர்ந்து வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு ஏற்றதல்ல என்ற எதிர்ப்பு; காங்கிரஸ் கொடி. அந்த மூவர்ண கொடியும் இஸ்லாத்துக்கு மாறுபட்டது என்ற கருத்து. எனவே பொதுவானவைகளை கொள்ளலாகாது என்று கிளர்ச்சி! எந்த ஒரு செயலுக்கும்

கதிர்ப்பு.”

  • இத்தியாவும் விடுதலையும், பக். 822. * விவாக இதுபற்றி அறிய-இந்தியாவும் விடுதலையும்,

கர்த். 9:7-329 பார்க்க.

A 440–11