பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரஸ் பதவியேற்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! ஆனால், நடந்ததென்ன என்பதை நீங்களே அறிவீர்கள்!

இந்து மகாசபை முஸ்லீம் லீக்கின் போக்கைக் கண் டித்தது. காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு விட்டு கொடுப்பதாய் கருதியது. காங்கிரஸ் ஆட்சி: கலன்கள்

காங்கிரஸ் ஆட்சியில் குடி நிறுத்தம், கடன் நிவாரணம், திருக்கோயில் திறப்பு முதலிய நன்மைகள் ஏற்பட்டாலும், வறுமைப் பிணி இன்னும் இருந்தது. முதலாளி மனங் கொண்ட மந்திரிமார் வறுமையைப் போக்க எங்ஙனம் முயல்வர்.

காங்கிரஸின் புதிய போக்கு

1940 ஆம் ஆண்டு காங்கிரசைச் செம்மைப் படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்கும் பரவியது. இதில் ஜவஹர்லால் நேரு, சுபாஷ் போஸ் ஆகியோர் ஆர்வங் காட்டினர்.

நடந்ததென்ன?

போஸை நிர்வாகம் விரட்டி ஒட்டியது.

முன்னேற்றக் கட்சி

போஸ் முன்னேற்ற கட்சி தொடங்கினார். ஆனால் குறுக்கிட்ட ஐரோப்பிய யுத்தம் அவரை முடக்கியது. யுத்தத்திற்கு எவ்வித நிபந்தனையுமின்றி இந்தியா உதவ வேண்டும் என்பது காந்தியடிகளின் உள்ளக்கிடக்கை. ஆனால் காரிய கூட்டம் பிரிட்டனுக்கு உதவு முன்னர், முழு சுயராஜ்யம் இந்தியாவுக்குக் கொடுக்கப்படும் என்றும் அதை நிர்ணயிக்கும் உரிமை இந்தியருடையது என்றும் உறுதிமொழி

I 6 6