பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளீட்டிக் கொடுக்கும் இயந்திரம். தொழிலாளர் வருந்த, வருந்த முதலாளிகள் மட்டுமே கொழுத்தால் சம தரிமம் வருமா? வராது, வராது, வாராது! நாட்டில் வளம் குன்றும்; குறையும்; இல்லாமல் போகும்.இதனை விஞ்ஞான ரீதியில் கார்ல் மார்க்ஸ் விளக்குகிறார். இது புதியதொரு கொள்கை அன்று. பற்பல சமயங்களும் இதையே வலியுறுத்தி யிருக்கின்றன. இக்கொள்கையே சமதர்ம கொள்கை.

சமதர்ம கொள்கையின் முதுகெலும்பு தொழிலியக்கம்.

சமதர்மம் தழைத்தல் வேண்டுமாயின் தொழிலியக்கம் தழைக்க வேண்டும்.

தொழிலியக்கம் பற்றி திரு. வி.க கீர் ஹார்டி என்பவர் மூலம் அறிந்தார். மேன்மேலும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய் தார். திரு. வி. கவின் நட்பு செல்வபதி செட்டியாருக்கு ஏற் பட்டது. திவான் பகதூர் கேசவப்பிள்ளை சென்னை மாகாணசங்கத் தலைவர். இவர்களுடன் மட்டுமின்றி திரு. இலட்சுமண முதலியார். இாாமாஞ்சலு நாயுடு ஆகியோருடனும் அடிக்கடி தொழிலாளர் இயக்கம் பற்றி உரைசாடல் நடத்தினார் திரு.வி.க.

விளைவு என்ன?

முதற் தொழிற் சங்கம்

1918 ஆம் ஆண்டில் மார்ச் 2-ந் தேதி சனிக்கிழமை ஜங்காராமாயம்மாள் பங்களாவில், வெங்கடேச குாை மிர்த வர்ஷணி சபையில் முதற் தொழிற்சங்கக் கூட்டம் தடை பெற்றது. அதே சென்னை தொழிற்சங்கமாக உருப் பெற்றது. கேசவப்பிள்ளை, வெளியூர் வாசியாதலால், சென்னைனாசி திரு. வாடியா தலைவராக்கப் பட்ட எt. கேசவப் பிள்ளையும் திரு.வி.க.வும் உபத் தலைவர்கள். * இந்நூலில் மார்க்ளtயமும் காந்தியமும் தொடர்பு

பகுதியில் விரிவான விளக்கம் காண்க.

1