பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருவுருவாய் ஆங்காங்கே அமைந்தமைந்து

கோட்டில் அசைந்தசைந்தே இயங்கிவரும் அதிசயக்தா

னென்னே’’

என வியக்கிறார்.

எனவே ஆன்ற சான்றோர் அழைத்தவாறே நானும் அழைக்கிறேன்.

ஒருபெயரும் ஒன்றுமில்லா உனையுஞ்சிவ மென்றே உரைத்துவிட்டார் புலவரக் காள் ஒதுகின்றேன்

அதையே’

ஏறக்குறைய இதே கருத்து உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடலில் (பாட்டு 1) தோன்றுவதைக் காண் கிறோம். ஆனால் இங்கே தமிழ்த்தென்றல் ஒரு படி மேலே போகின்றார். அத்தகைய ஒரே கடவுளை எப்படி அறிவது?

இது தான் அவர் கேட்கும் வினா. அதற்கு விடையும் அவரே தருகிறார்.

அது சரி! உலகில் மதங்கள் எத்தனை எத்தனை! சமயப் பிணக்குகள் எத்தனை கோடி! இதில் எது நமக்கு ஏற்ற தென்று தெரியவில்லையேiமனத்திலே இந்தப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாத போது எந்த சமயத்தைப் பின்பற்றுவது? ஒரே கலக்கமாக உள்ளதே; இந்தக் குழப்பத்திற்கு முடிவே கிடையாதா? உண்டு, உண்டு, நிச்சயம் உண்டு! இக்கலக்கத் திற்கும் ஒரு முற்றுப்புள்ளி. உண்டு. அப்படியா? எப்படி?

‘கடவுள் கெறியொன்றென்னுங் கருத்துகிலை

வேண்டும் கட்டுமதக் களைகளெலாங் கால்சாய்தல்

வேண்டும்’

  • திரு. வி. க, சிவனருள் வேட்டல், கடந்த நிலை-2.

224