பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாவற்றையும் கடந்துநிற்கும் கடவுள். இயற்கையை உடலாகக் கொண்டவர்: குருவிடத்தில் கோயில் கொண் டவர்; கடவுள் திருவடி போற்றத்தக்கது.

இதுவே கடவுள் வாழ்த்திலுள்ளது,

இந்தப் பத்துப் பாக்களில் முதல் பாட்டில்நுட்பமாகவும் இரண்டாவது சிலரே பயனடையக் கூடியதாகவும் உள்ளது. மூன்றாவது குறட்பா விளக்கம் தருவதாக அமைகிறது. நான்காவது குறட்பா முதல் செயல்முறையை விவரிப்பதாக அமைந்திருப்பது கவனிக்கத் தக்கது.

இந்நூலிலுள்ள எல்லா பாக்களுக்கும் திரு.வி.க. கூறிய விளக்கத்தைக் கூறி ஆராய்ந்தால், நூல் பெருகும். எனவே ஒவ்வொரு அதிகாரத்தினின்றும் ஒரே ஒரு குறளை மட்டும் எடுத்து ஆராய்ந்து திரு.வி.க.வின் உள்ளக் கண்ணாடியை நோக்குவோம்.

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

திரு.வி.கவின் விளக்கத்தைப் பார்ப்போமா?

எழுத்து உலகிலுள்ள எல்லா மொழிகளின் எழுத்துக் களை குறிப்பதாக விளக்கம் தருவது’ உலகிற்கே பாடிய உலகியல் குறட்பாவலன் வான்புகழ் உலகில் வாழ்ந்த திருவள்ளுவரின் பெரு நோக்கை,சகோதரமனப்பான்மையை எடுத்துக் காட்டுவதாகும்.

மொழிகளில்-இரண்டு வகை. அவை வரிவடிவ முள்ளவை, வடிவம் இல்லாதவை, இரண்டு வகையும் அகர ஒலியையே முதலாகக் கொண்டிருக்கின்றன.

இந்த விளக்கம், தமிழ்த் தென்றல் திரு. வி. க நாடு, மொழி, வகுப்பு ஆகிய கட்டுகளைக் கடந்தவரென்பதைப் பறை சாற்றுகின்றது,

I 5