பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தானமும் தவமும் நடைபெறுவதற்கு மழை தேவை. மழை இன்றேல்? தானமும் இல்லை; தவமும் இல்லை; ஏன் தவமே இருக்காது என்பதை அடுத்த குறள் விளக்கும். இது இல்லாவிட்டால் போகிறது. பெரியோர்க்கு பூசையாவது நடக்குமா?

நடக்காது, நடக்காது என்பதைக் கூறுகிறார் வள்ளுவர் ஒன்பதாவது குறளில். மழையின் பணிகள்

ஆக மழையின் தன்மைகள் யாவை?

‘அழிப்பதும், ஆக்குவதும்’ மழை இல்லாவிட்டால் அழிவு உண்டு. ஆக்கப் பணிகளில்லை, மிக மிக அதிகமாக மழை பெய்தாலோ?

மழை பெய்யாவிடின் என்ன கேடுகள் விளையுமோ, அவை போன்ற கேடுகள் விளையும்.

மழை கெடுக்கவும் கெடுக்கும்; எடுக்கவும் எடுக்கும்;

இரண்டும் செய்ய வல்லது மழை.

இனி அடுத்த அதிகாரம் நீத்தார் பெருமை’ என்பதை ஆராய்வோம்.

நீத்தாரது பெருமையைக் கூறும் இந்த அதிகாரம், நீத்தார் யார்? மனமாசுகளை விடுத்தவர்; கட்டுகளி னின்றும் விடுபட்டவர்; இவரே நீத்தார் எனப்படுவர்.

வழிபாடும் நீத்தாரும்

பரம் பொருளை வழிபடுகிறோம். இந்தப் பரம் பொருளுக்குள்ள தனிச்சிறப்பு யாது? பரம் பொருள் வாக்கு மனங்கடந்தவன். நீத்தாரை வழிபடுதல் மூலமாக பரம் பொருளையும் வழிபடுகிறோம். எப்படி? நீத்தாரை வழிபட்டால் அந்த வழிபாட்டை பரம் பொருள் ஏற்கும்:

26